Home /News /sports /

ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பிடித்த இப்போதைய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்,  சொல்கிறார் பாண்டிங்

ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பிடித்த இப்போதைய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்,  சொல்கிறார் பாண்டிங்

சூர்யகுமார் யாதவ்,

சூர்யகுமார் யாதவ்,

சூரியகுமார் யாதவ் இன்னொரு 360 டிகிரி ஆடும் வீரர்தான், கொஞ்சம் ஏ.பி.டிவில்லியர்ஸ் சாயல் அவர் பேட்டிங்கில் உள்ளது என்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இவர் மும்பை இந்தியன்ஸ் கோச் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சூரியகுமார் யாதவ் இன்னொரு 360 டிகிரி ஆடும் வீரர்தான், கொஞ்சம் ஏ.பி.டிவில்லியர்ஸ் சாயல் அவர் பேட்டிங்கில் உள்ளது என்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இவர் மும்பை இந்தியன்ஸ் கோச் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜோப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பிட்ச் பந்தை சிக்சருக்கு விளாசிய போதே இவரது திறமைகள் பளிச் என்று தெரியவந்தது. 23 டி20 சர்வதேசப் போட்டிகளிலேயே ஐசிசி டி20 ரேங்கிங்கில் 2ம் இடம் பிடித்து விட்டார். ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்தால் 175% வைத்திருக்கிறார்.

    ஆனால் இவரையும் தொடக்கத்தில் இறக்கி பல டவுன் ஆர்டர் வீரராக மாற்றுகிறேன் என்று திராவிட், ரோஹித் கூட்டணி தவறிழைத்து வருகின்றனர். ஆனால் சூரியாவை சரியாகக் கணிக்கும் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

    “மிக மிக ஆர்வமூட்டும் ஒரு சுவாரஸிய வீரர் சூரியகுமார் யாதவ். இவரைப்போன்ற ஒருவரை பிளேயிங் லெவனில் எந்த ஒரு கேப்டனும் உடனடியாக தேர்வு செய்து விடுவார். டி20 உலகக்கோப்பையில் ஒருவர் இடம் உறுதி என்றால் இந்திய அணியில் அது ரோஹித் சர்மாவுக்குப் பிறகு சூரியகுமார் யாதவ்தான்.



    இவர் அணியில் இருந்தால், டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஒரு நல்ல வீரர் என்று இவரை பாராட்டுவார்கள், ரசிப்பார்கள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் உண்மையில் ஒரு அருமையான பேட்டரைப் பார்க்கவிருக்கிறார்கள்.

    தன்னம்பிக்கை மிக்கவர், சவாலிலிருந்து ஒரு போதும் விலகியதில்லை. எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

    சூரியா மைதானம் நெடுக 360 டிகிரியில் ஷாட்களை ஆடுகிறார். ஏ.பி.டிவில்லியர்ஸ் அவரது உச்சத்தில் இருப்பது போல் கொஞ்சம் ஆடுகிறார் சூரியா. லேப் ஷாட், லேட் கட், கீப்பர் தலைக்கு மேல் தூக்கி விடுவது, நேராக அடிக்கிறார், லெக் திசையில் அருமையாக அடிக்கிறார், பிளிக் ஷாட், ஸ்பின், வேகப்பந்து இரண்டையும் அற்புதமாக ஆடுகிறார்.

    இந்திய அணியின் டாப் 4-ல் இவர் இருக்க வேண்டும். சூரியாவை ஓப்பனிங்கில் இறக்கக் கூடாது, புதிய பந்திலிருந்து இவரை கொஞ்சம் பாதுகாத்து ஒளித்து வைக்க வேண்டும், மிடில் ஓவர்களில் இறங்கினால் நல்லது, மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை இறங்காமல் ஏற்றி விட்டால் போதும் கடைசி வரை சூரியா நின்றால் என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியும்.

    இவரை ஒப்பனிங் இறக்கக் கூடாது 4ம் நிலைதான் அவருக்கு ஏற்ற டவுன் ஆர்டர்” என்கிறார் ரிக்கி பாண்டிங். இவர் கூறுவது 100% சரி, ஏனெனில் டெத் ஓவர்களில் சூரியாவின் ஸ்ட்ரைக் ரேட் 258 என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket

    அடுத்த செய்தி