Home /News /sports /

ஆசியக் கோப்பை மட்டும்தானா?- உலகக்கோப்பையும் நமக்குத்தான் - ஹர்திக் பாண்ட்யா சூளுரை

ஆசியக் கோப்பை மட்டும்தானா?- உலகக்கோப்பையும் நமக்குத்தான் - ஹர்திக் பாண்ட்யா சூளுரை

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

பாகிஸ்தானை ஆசியக் கோப்பை 2022-ல் வீழ்த்தக் காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆசியக் கோப்பை மட்டும் இந்திய அணியின் இலக்கல்ல உலகக்கோப்பையை வெல்வதும்தான் என்று தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Inter, IndiaDubai
பாகிஸ்தானை ஆசியக் கோப்பை 2022-ல் வீழ்த்தக் காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆசியக் கோப்பை மட்டும் இந்திய அணியின் இலக்கல்ல உலகக்கோப்பையை வெல்வதும்தான் என்று தெரிவித்துள்ளார். 

அன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை முதல் ஆட்டத்தில் பிரமாதமான வேகத்துடன் எகிறு பந்துகளை வீசி பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலையச் செய்த ஹர்திக் பாண்டியா பிறகு பேட்டிங்கில் இறங்கி தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு கடைசி ஓவரின் 4வது பந்தில் சிக்ஸ் விளாசி ஜெயிக்க வைத்தார். ஒருவேளை தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கில் இருந்திருந்தால் சொல்ல முடியாது ஏனெனில் தினேஷ் கார்த்திக் ஸ்பின்னுக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட், மற்றும் ஆட்டம் அவ்வளவாக சோபித்ததில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read:  சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார் ஷாஹின் அஃப்ரிடி: டி20 உலகக்கோப்பை ஆடுவது சந்தேகம்?

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டியில், “ஒரு அணியாக எங்களுக்கு ஏற்படுத்திய பதட்டத்தை சவாலாக எடுத்து கொண்டு  பாகிஸ்தானை வென்றதன் மூலம் ரசிகர்களின் அன்பையும் பேராதரவையும் பெற்றோம் ஜடேஜாவும் சிறப்பாக ஆடினார்.  இதே மைதானத்தில் 4 ஆண்டுகள் முன்பு நடந்தது என் மனக்கண் முன் விரிகிறது, காயமடைந்து நான் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டேன். தற்போது மீண்டும் அதே மைதானம், மறுபடியும் பாகிஸ்தான், அதே ஓய்வறை, இது எல்லாவற்றையும் விட அணியில் இடம் கிடைத்ததுதான் முக்கியம்.

இந்திய உடற்கோப்பு பயிற்சியாளர்கள்தான் என் மீள்வருகைக்குக் காரணம்.  பாகிஸ்தானில் இளம் பவுலர்கள் நசீம் ஷா, ஷா நவாஸ் தவிர இன்னொரு இடது கை பவுலரும் இருப்பதை அறிவேன்.  7 ரன் தான் தேவைப்பட்டது, எனக்கு அது பெரிய ஸ்கோர் அல்ல, 15 இருந்தாலும் அடித்திருப்பேன்.  ஜடேஜா அவுட் ஆனவுடன் பதற்றம் ஏற்பட்டது. கடைசி ஓவரில் என்னைவிட பவுலர் அதிக பதற்றத்துடன் இருப்பார்கள் எனவே அதை பயன்படுத்திக் கொண்டேன். ஆசியக் கோப்பையை வெல்வது மட்டுமல்ல உலகக்கோப்பையை வெல்வதுதான் திட்டம், என்றார் ஹர்திக் பாண்டியா.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Asia cup cricket, Cricket, Hardik Pandya

அடுத்த செய்தி