முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக சதங்கள் எடுத்தவர் யார் தெரியுமா?- சச்சினை முறியடிக்கும் ரோஹித் சர்மா

ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக சதங்கள் எடுத்தவர் யார் தெரியுமா?- சச்சினை முறியடிக்கும் ரோஹித் சர்மா

விராட் கோலி

விராட் கோலி

ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் டி20 தொடர் வரும் 27ம் தேதி யுஏஇயில் தொடங்குகிறது. இதில் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chennai, India

ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் டி20 தொடர் வரும் 27ம் தேதி யுஏஇயில் தொடங்குகிறது. இதில் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்கவிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோத இருக்கின்றன. அதுவும் கடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கு இந்திய அணி செம உதை வாங்கியதிலிருந்தே பாகிஸ்தானுக்கு ஒரு பழிதீர்ப்பு பதிலடி கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கின்றது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை சச்சின் மற்றும் ரோஹித் சர்மா முறையே 6 முறை பங்கேற்றிருக்கிறார்கள். வரும் ஆசியக்கோப்பை 2022 தொடரில் ரோகித் விளையாடும்போது அது அவருக்கு 7 தொடராக இருக்கும். இதன் மூலம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக முறை விளையாடியவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துவிடுவார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஜடேஜா மற்றும் தோனி, முகமது அசாரூதீன் ஆகியோர் தலா 5 முறை ஆசியக்கோப்பையில் பங்கேற்று விளையாடி இருக்கின்றனர்.

விராட் கோலி ,கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, சித்து ஆகியோர் தலா நான்கு முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றனர். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் இலங்கையின் அதிரடி மன்னன் சனத் ஜெயசூரியா. இவர் 1990-2008 முதல் 25 போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் 1220 ரன்கள் எடுத்து 6 சதங்கள் 3 அரைசதங்கள் என்று 53.04 என்ற சராசரியில் முதலிடம் வகிக்கிறார்.ஜெயசூரியாவின் அதிகபட்ச ஸ்கோர் 130. அதிக சதங்களை ஆசியக்கோப்பையில் எடுத்தவரும் ஜெயசூரியாதான்.

ஆசியக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் 183- விராட் கோலி சாதனை

2வது இடத்தில் இலங்கையின் கே.சி. சங்கக்காரா, 24 போட்டிகளில் 1075 ரன்களை 48 ரன்கள் சராசரியில் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 23 போட்டிகள் 21 இன்னிங்ஸ்களில் 971 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் 114, சராசரி 51.10. 7 அரைசதங்கள், சதம் அடித்ததில்லை. 4ம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் 907 ரன்களுடனும், 5வதாக ரோஹித் சர்மா 883 ரன்களுடனும், 6ம் இடத்தில் விராட் கோலி 766 ரன்களுடன் உள்ளார், இவரது சராசரி 63.83 அதே போல் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் விராட் கோலியுடையதுதான் இவர் 183 ரன்களை விளாசியுள்ளார்.

தோனி, 20 இன்னிங்ஸ்களில் 690 ரன்கள். சராசரி 69.00, அதிகபட்ச ஸ்கோர் 109. சராசரியில் நம்பர் 1 தோனிதான்.

top videos

    அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இருக்கிறார். இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை ஆசியக்கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. பெரிய ஆச்சரியம் என்னவெனில் ஒருமுறை கூட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை இறுதியில் மோதியதில்லை.

    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia Cup cricket series, Dhoni, Rohit sharma, Sachin tendulkar, Virat Kohli