ஆசியக் கோப்பை டி20 போட்டிகள் இப்போதைக்கு இலங்கையில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 11ம் தேதிவரை போட்டிகள் நடைபெறுகின்றன.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழு தொடரையும் நடத்தி முடித்துள்ளது, இப்போது பாகிஸ்தான் தொடரை நடத்தி வருகிறது. நாட்டில் பெரும் பஞ்சம் நிலவி வருகிறது. எரிபொருள், உணவுப்பற்றாக்குறை, மருந்துகள் தட்டுப்பாடு நிலவினாலும் கிரிக்கெட் தொடர்கிறது.
கிரிக்கெட் நாட்டின் அன்னியச் செலாவணி ஆதாரமாக அங்கு உள்ளது. எனவே ஆசியக்கோப்பையை இலங்கை விட்டுத் தராது என்றே கூறப்படுகிறது, இருப்பினும் நிலைமைகள் போரட்டக்களமாகி மக்கள் எழுச்சியாகிவிட்டால் வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் எனவே, இலங்கையை விட்டால் யுஏஇ, அல்லது வங்கதேசம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நடத்தினால் ரசிகர்கள் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது, கேட் கலெக்ஷன் சிறப்பாக இருக்கும்,ஆனால் இப்போதைக்கு இலங்கையிலிருந்து மாறுமா என்று தெரியாவிட்டாலும், மாற்று இடமாக யுஏஇ-யை வைத்துள்ளனர்.
ஆசியக் கோப்பையை இந்தியா 7 முறை வென்றுள்ளது, அடுத்ததாக இலங்கை 5 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் 2 முறை வென்றுள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியனாக திகழ்கிறது. 1984 முதல் 14 ஆசியக் கோப்பை தொடர்கள் நடந்துள்ளன, முதலில் எல்லாம் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது, இப்போது டி20 போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணியுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி சேர்த்து 6 அணிகள் பங்கேற்று மொத்தம் 13 போட்டிகளில் ஆடும்.
யுஏஇ, குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் அணிகள் குவாலிபையரில் மோதி வருகின்றன.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.