Home /News /sports /

இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா- அக்சர் படேல், தினேஷ் கார்த்திக் அணியில்?

இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா- அக்சர் படேல், தினேஷ் கார்த்திக் அணியில்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் செஹல் இன்று ஆடுவது கடினமே. ஏனெனில் எதிரணி ஸ்பின்னர்கள் நன்றாக வீசிய பிட்ச்சில் செஹல் அன்று பாகிஸ்தானுக்கு எதிராஜ 43 ரன்களை வாரி வழங்கினார். 

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதையடுத்து இந்தியாவின் நெட் ரன் ரேட் -0.126 என்று உள்ளது. இன்று இலங்கையையும், ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தினாலுமே மற்ற முடிவுகளை நம்பித்தான் இருக்க வேண்டும் எனவே அதிக மார்ஜினில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

    டாஸ் ஒரு பெரிய விவகாரமாக உள்ளது, டாஸ் வெல்லும் அணி இலக்கை விரட்டினால் வெற்றி நிச்சயம் என்ற நிலை தொடர்கிறது ஆகவே ரோஹித் சர்மா கையில் இல்லாத ஒன்றும் இந்திய அணியின் விதியைத் தீர்மானிக்கிறது. ஆனால் டாஸ் மட்டும்தானே ரோஹித் சர்மா கையில் இல்லை, மற்ற அணித்தேர்வு, களவியூகம், டவுன் ஆர்டர் முறை, பவுலிங் மாற்றம், போன்றவை ரோஹித் சர்மா கையில்தானே உள்ளது.

    குறிப்பாக இந்திய அணி இன்று இலங்கையிடம் தோற்கக் கூடாது. அப்படித் தோற்றால் மற்ற முடிவுகளை நம்பித்தான் இருக்க வேண்டும். அதோடு இலங்கை அணி இறுதியில் நுழையும் வாய்ப்பு அதிகம். இலங்கை மோசமாக ஆப்கானிடம் தோற்றது, ஆனால் வங்கதேசத்தை குரூப் ஸ்டேஜில் வீழ்த்தி,  சூப்பர் 4 சுற்றில் ஆப்கானின் 176 ரன்கள் இலக்கை விரட்டி வென்றது.
    ஆப்கானுக்கு எதிராக ரஹமனுல்லா குர்பாஸின் 45 பந்து 84 ரன்களை முறியடிக்க இலங்கையின் நிசங்கா, குசல் மெண்டிஸ், குணதிலகா, பனுகா ராஜபக்ச விரைவு கதியில் 30 ரன்கள் எடுத்தனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றாலும் கே.எல்.ராகுல் 0 மற்றும் 39 பந்து 36 என்ற மந்த இன்னிங்ஸிற்கு பிறகு அன்று பாசிட்டிவ் ஆக ஆடி 28 ரன்களை எடுத்தது, விராட் கோலி ரன்களை விரைவு கதியில் எடுக்க தொடர்ந்து முயற்சியில் இருப்பது, இரண்டும் இந்திய அணிக்குச் சாதகம்.

    இலங்கைக்கு எதிராக சமீபத்தில் 3-0 ஒயிட் வாஷ் கொடுத்தது இந்திய அணி. அந்த நம்பிக்கை இந்திய அணியிடத்தில்  இருக்கும்.
    இன்று இந்திய அணிக்கு பெரிய கஷ்டம் இலங்கை ஸ்பின்னர்கள் ஹசரங்கா மற்றும் தீக்‌ஷணா. இருவருமே ஐபிஎல் தொடரில் இந்திய பவுலர்களுக்கு வீசி அனுபவம் பெற்றவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் செஹல் இன்று ஆடுவது கடினமே. ஏனெனில் எதிரணி ஸ்பின்னர்கள் நன்றாக வீசிய பிட்ச்சில் செஹல் அன்று பாகிஸ்தானுக்கு எதிராஜ 43 ரன்களை வாரி வழங்கினார்.

    இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், பிஷ்னாய்.
    இலங்கை உத்தெச லெவன்: நிசங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பனுகா ராஜபக்ச, ஷனகா (கேப்), ஹசரங்கா, கருணரத்னே, தீக்‌ஷனா, அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup, Cricket, India v Srilanka

    அடுத்த செய்தி