ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 15-வது முறையாக நடத்தப்படும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 20 ஓவர் போட்டியாக இம்முறை நடைபெறுகிறது. 13 முறை ஒரு நாள் போட்டியாகவும், ஒரு முறை டி 20 போட்டியாகவும் நடைபெற்ற இந்த தொடர்களில் ஏழு முறை இந்தியா கோப்பையை முத்தமிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 14 முறை நேருக்கு நேர் மோதியதில் 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை.
ஆசிய கோப்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே டி 20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை சந்தித்துள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் 83 ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டி அசால்டாக வெற்றியை ருசித்தது இந்திய அணி. விராட் கோலி இந்த போட்டியில் 49 ரன்களை விளாசி அசத்தினார்.
2021 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய அணி இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளது. ரோஹித், கே.எல்.ராகுல்,விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் என அதிரடி பேட்டிங் பட்டாளத்தை இம்முறை இந்திய அணி கொண்டுள்ளது. ஆல்ரவுண்டர் வரிசையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா. சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜடேஜா,அஸ்வின், சஹல், பிஸ்னாய் என துபாய் மண்ணில் எதிரணியை சுழற்ற காத்திருக்கின்றனர். தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வினும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Also Read: Asia Cup 2022: பாகிஸ்தான் அச்சப்படும் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் - ஸ்ட்ரைக் ரேட் 175.45
அதேவேளையில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு சற்றும் குறைவில்லாமல் நட்சத்திர பட்டாளங்களை கொண்டுள்ளது. பாபர் ஆசம், சஹாதப் கான், பக்கர் ஷாமன், ஹைதர் அலி , விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் என இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்க காத்திருக்கின்றனர். உலகின் நம்பர் ஒன் வீரரான ஷகீன் அஃப்ரிடி காயம் காரணமாக விலகியதால் பந்துவீச்சில் சற்று சுதாரித்த ஆடவேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, Asia Cup cricket series, Asia cup match, Asia cup pakistan india, Asia cup today match, Babar Azam, India vs Pakistan, Rohit sharma, Virat Kohli