Home /News /sports /

Asia Cup 2022 Ind vs Pak : இன்றைய ஆட்டத்தில் இடம்பெறும் இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்

Asia Cup 2022 Ind vs Pak : இன்றைய ஆட்டத்தில் இடம்பெறும் இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்

இந்திய அணி உத்தேச வீரர்கள் பட்டியல்

இந்திய அணி உத்தேச வீரர்கள் பட்டியல்

இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்களின் உத்ததேச பட்டியலை, கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதன்படி, தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற வாய்ப்பு இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் அணியில் இடம்பெறும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30-க்கு ஆட்டம் தொடங்கவுள்ளது.

    இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக உள்ளனர்.

    Asia Cup 2022: பாகிஸ்தான் அணியை நாங்கள் மற்ற எதிரணிகளில் ஒன்றாகவே கருதுகின்றோம் - ரோகித் சர்மா

    துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதன் அடிப்படையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இந்த போட்டியை லைவ் செய்யவுள்ளன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதையும் இந்த நிறுவனமே நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது.

    ஓடிடி தளத்தை பொருத்தவரையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.

    Asia Cup 2022 : இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

    இந்நிலையில் இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்களின் உத்ததேச பட்டியலை, கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதன்படி, தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற வாய்ப்பு இல்லை.

    உத்தேச வீரர்களின் பட்டியலைப் பார்க்கலாம்…

    இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட்  கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

    பாகிஸ்தான் அணி வீரர்கள்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஹைதர் அலி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket, Cricket, Indian team

    அடுத்த செய்தி