Home /News /sports /

Asia Cup 2022 : ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 192 ரன்கள் குவிப்பு…

Asia Cup 2022 : ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 192 ரன்கள் குவிப்பு…

98 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த விராட் கோலி - சூர்யகுமார்.

98 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த விராட் கோலி - சூர்யகுமார்.

கோலி – சூர்ய குமார் இணை, ஹாங்காங் பந்துவீச்சை பொறுப்பாக எதிர்கொண்டு விளையாடி ரன்களை சேர்த்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களை குவித்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் ஏ-விலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கன் அணிகள் குரூப் பி-யிலும் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா கடந்த ஞாயிறன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

    குரூப் ஏ பிரிவில் இன்றைய ஆட்டம் இந்தியா – ஹாங்காங் அணிகளுக்கு இடையே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். மிகவும் நிதானமாக விளையாடிய ராகுல் 39 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ரோஹித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த கோலி – சூர்ய குமார் இணை, ஹாங்காங் பந்துவீச்சை பொறுப்பாக எதிர்கொண்டு விளையாடி ரன்களை சேர்த்தது. 15 ஓவருக்கு மேல் இருவரும் அதிரடி காட்டத் தொடங்கினர்.



    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக சூர்ய குமார் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார்.



    விராட் கோலி 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். இருவரும் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup, Cricket

    அடுத்த செய்தி