Home /News /sports /

Asia Cup 2022 : இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

Asia Cup 2022 : இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…

ரோஹித் சர்மா - பாபர் ஆசம்

ரோஹித் சர்மா - பாபர் ஆசம்

இந்தியாவும் – பாகிஸ்தானும் இதுவரை 9 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை எதில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30-க்கு ஆட்டம் தொடங்கவுள்ளது.

    இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக உள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. 'அதிகரிக்கும் அழுத்தம் எஞ்சாய் செய்வதற்கே' - கோலி

    துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதன் அடிப்படையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இந்த போட்டியை லைவ் செய்யவுள்ளன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதையும் இந்த நிறுவனமே நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது.

    ஓடிடி தளத்தை பொருத்தவரையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை நேரடியாக கண்டு ரசிக்கலாம்.

    Asia Cup 2022: பாகிஸ்தான் அணியை நாங்கள் மற்ற எதிரணிகளில் ஒன்றாகவே கருதுகின்றோம் - ரோகித் சர்மா

    பாகிஸ்தானில் பி. டிவி மற்றும் டென்ஸ்போர்ட்ஸ் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓ.எஸ்.என். ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.

    இந்தியாவும் – பாகிஸ்தானும் இதுவரை 9 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket, Cricket

    அடுத்த செய்தி