இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஊதிப்பெருக்கப்பட்ட ஆசியக் கோப்பை 2022 போட்டி அத்தனை ஊதிப்பெருக்கலுக்குமான சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் அமைந்தது, இந்திய அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்கள் முடிவில் 97/5 என்று வெற்றி பெறும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கே அதிகமாக இருந்தது. இதை புவனேஷ்வர் குமார் ஒப்புக் கொண்டார்.
ஆனால் அதன் பிறகு ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆட்டம் பிரமாதமாக அமைந்தது.
ஸ்லோ ஓவர் ரேட்டினால் பாகிஸ்தான் கடைசி 3 ஓவர்களை 30 யார்டு சர்க்கிளுக்குள் 5 பீல்டர்களை வைத்து வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் ஒரு காரணம். இந்தியாவும் அப்படித்தான் ஸ்லோ ஓவர் ரேட்டில் பாதிக்கப்பட்டு அன்று 5 பீல்டர்களை வட்டத்துக்குள் நிறுத்த வேண்டியதானது. இந்நிலையில் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரின் 4வது பந்தில் பெரிய சிக்சரை அடித்து பாகிஸ்தான் ரசிகர்கள் இருதயத்தில் இடியை இறக்கினார்.
இதுதொடர்பாக அன்று பாபர் அசாமுக்கு திடீர் எகிறு பந்தை வீசி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வீழ்த்தியதோடு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து கூறியதாவது:“நாங்கள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது நல்ல முடிவாகும். ஆடுகளத்தில் புல்கள் இருந்ததால் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என்று நினைத்து பவுலிங்கை தேர்வு செய்தோம். கடந்த ஆண்டு நாங்கள் பாகிஸ்தான் அணியிடம் கண்ட தோல்வி குறித்து நினைக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் ஆட்டத்தின் முடிவு குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. அதேநேரத்தில் ரசிகர்கள் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள்.
Also Read: தினேஷ் கார்த்திக் கூடாது, ரிஷப் பண்ட் தான் ஆட வேண்டும்- கம்பீர் விளாசல்
ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஹர்திக் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம். ஹர்திக் இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் நல்ல பார்மில் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற பவுலர்களும் நன்றாக பந்து வீசினர். அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு வெற்றிக்கு காரணம் என்று கருதுகிறேன்.
Also Read: இது சிக்ஸ் அடிக்கும் ஷாட் அல்ல, கேட்சிங் பிராக்டீஸ்- கோலி ஷாட் குறித்து கம்பீர் விமர்சனம்
பாபர் அசாம் ஆட்டமிழந்ததும் அவர்களது பேட்டிங் திட்டம் சீர்குலையும் என்பது எங்களுக்கு தெரியும். 10 ஓவர்களுக்கு பிறகு போட்டி கடினமாகவே இருந்தது. அந்த தருணத்தில் ஆட்டத்தின் முடிவு எந்தபக்கமும் போகலாம் என்பது போல் தான் இருந்தது. உள்ளபடியே சொல்ல வேண்டுமெனில் இரு அணியினருக்கும் வெற்றி வாய்ப்பு 50-50 சதவீதமாக இருந்தது.” என்றார் புவனேஷ்வர் குமார். இன்று நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கான் - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, Asia cup india, Cricket