ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்

சிறப்பாக பந்துவீசியாக இந்திய மகளிர் அணியினர் தரப்பில் சினே ராணா 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெண்கள் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை 37 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

  வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் மற்றும் தாய்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தாய்லந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

  Also Read: ஒரே சதத்தில் விராட் கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

  15.1 ஓவர்களில் தாய்லாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசியாக இந்திய மகளிர் அணியினர் தரப்பில் சினே ராணா 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீப்தி சர்மா மற்றும் காய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 40 ரன்களை குவிந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் மேக்னா 20 ரன்களும் பூஜா 12 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Asia cup india, Indian women cricket