Home /News /sports /

பாகிஸ்தான் தோற்றதற்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணம்? - எப்படி? ஏன்?

பாகிஸ்தான் தோற்றதற்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணம்? - எப்படி? ஏன்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்த விதிமுறையினால் இப்போது ஆசியக் கோப்பை முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலையில் உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • INTER, IndiaDubaiDubai
நேற்று முன் தினம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை டி20 தோல்விக்குப் பழித்தீர்த்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இருஅணிகளுக்குமே பெரிய சிக்கல் என்னவெனில் இரு அணிகளுமே ஓவர்களைக் குறித்த நேரத்தில் வீச முடியவில்லை என்பதுதான், காரணம் அங்கு இருக்கும் உஷ்ணத்தில் பவுலர்கள் விரைவில் பந்து வீச முடியாது என்பதுதான் உண்மை.

இந்நிலையில் அன்றைய போட்டியில் இரு அணிகளுமே கடைசி 3 ஓவர்களில் 30 அடி வட்டத்துக்குள் 5 பீல்டர்களை நிறுத்தி வைத்து பந்து வீசினர். இது ஏன் தெரியுமா? இரு அணிகளும் கடைசி 3 ஓவர்களில் அடடா அட்டாக் செய்கிறதே என்று ஆச்சரியப்பட்டால் அது தவறு. ஸ்லோ ஓவர் ரேட்டுக்கான புதிய விதிமுறை அமலுக்கு வந்து அந்த விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால் இப்படி நடந்தது.

ஜனவரி 2022-ல் இந்த புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஓவர்களை 85 நிமிடங்களுக்குள் போட்டு முடிக்கவேண்டும், அந்த நேரத்தைக் கடந்து எந்த ஓவரைத் தொடங்கினாலும் அந்த ஓவரிலிருந்து 5 பீல்டர்களை சர்க்கிளுக்குள் வைத்து வீச வேண்டும், இது பேட்டிங் அணிக்கு சாதகமே. அப்படித்தான் அன்று இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே கடும் வெயில் தாக்கத்தில் ஆடியதால் முடியவில்லை, 85 நிமிடங்களில் 17 ஓவர்களையே இரு அணிகளும் போட்ட படியால் கடைசி 3 ஓவர்களில் 5 பீல்டர்களை சர்க்கிளுக்குள் நிற்க வைத்து வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

Also Read: பாகிஸ்தானுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது - புவனேஷ்வர் குமார்

இது ஒரு விதத்தில் இரு அணிகளுக்குமே உதவின, பாகிஸ்தானும் மிக மோசமான நிலையிலிருந்து 147 ரன்களை எடுக்க முடிந்தது. அதே வேளையில் இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில்97/5 என்ற நிலையிலிருந்து கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தைத் திருப்ப முடிந்தது இந்த 5 பீல்டர்கள் சர்க்கிளுக்குள் வர வேண்டும் என்ற ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையினால்தான்.

இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் சதைப்பிடிப்பினால் அவதியுற்றிருக்கும் நிலையில் இந்த விதிமுறையும் சேர்ந்து கொள்ள அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விதிமுறையினால் இப்போது ஆசியக் கோப்பை முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலையில் உள்ளது. ஓவர்களை விரைவு கதியில் முடிக்க வேண்டும், 85 நிமிடங்களில் 20 ஓவர்களை வீசுவதுதான் நல்லது.

Also Read: இது சிக்ஸ் அடிக்கும் ஷாட் அல்ல, கேட்சிங் பிராக்டீஸ்- கோலி ஷாட் குறித்து கம்பீர் விமர்சனம்

ஏனெனில் உதாரணமாக கடைசி ஓவரைப் போடும்போது 85 நிமிடங்கள் கடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் எதிரணிக்கு வெற்றி பெற 12-14 ரன்கள் தேவை என்றால் ஒரு பீல்டரை 30 அடி வட்டத்துக்குள் கொண்டு வருவது பவுலிங் அணியினருக்கு தோல்வியில்தான் முடிய வாய்ப்புள்ளது.  ஆனால் ஒரே கேள்வி என்னவெனில் பேட்டிங் செய்யும் அணியில் பேட்டர்கள் ரெடியாகத் தாமதப்படுத்தினால் அது பவுலிங் அணியின் தவறாகுமா என்ற கேள்விக்கு ஐசிசியிடம் பதிலில்லை.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Cricket, India vs Pakistan

அடுத்த செய்தி