Home /News /sports /

தோனியை ‘டக்’அவுட் செய்த ஹாங்காங் ஸ்பின்னர்: கோபத்தில் இருக்கையை கிழித்த சிறுவன்- ஒரு நினைவோடை

தோனியை ‘டக்’அவுட் செய்த ஹாங்காங் ஸ்பின்னர்: கோபத்தில் இருக்கையை கிழித்த சிறுவன்- ஒரு நினைவோடை

தோனி

தோனி

அன்று ஹாங்காங் இந்தியாவுக்கு கிலி கொடுத்தது, என்பது வேறு கதை. இன்னொரு புறம் அப்போதைய, இப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை 23 ரன்களிலும் தல தோனியை ‘டக்’ அவுட் ஆக்கியும் பிரபலமடைந்த ஹாங்காங் ஸ்பின்னர் ஈசான் கான் இன்றும் ஆடுகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டித் தொடராக நடைபெற்று வரும்போது இன்று ஹாங்காங்குடன் இந்தியா மோதுகிறது, இதே ஆசியக் கோப்பையில் 2018ம் ஆண்டு இந்தியாவுடன் ஹாங்காங் ஆடிய போட்டி 50 ஓவர் போட்டியாகும் அன்று ஹாங்காங் இந்தியாவுக்கு கிலி கொடுத்தது, என்பது வேறு கதை. இன்னொரு புறம் அப்போதைய, இப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை 23 ரன்களிலும் தல தோனியை ‘டக்’ அவுட் ஆக்கியும் பிரபலமடைந்த ஹாங்காங் ஸ்பின்னர் ஈசான் கான் இன்றும் ஆடுகிறார்.

அன்றும் இதே துபாய் மைதானத்தில் ஹாங்காங் கேப்டன்  ஆன்ஷி ராத் டாஸ் வென்று தைரியமாக இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ரோஹித், தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ் என்று அதிரடி கும்பல் இருந்தும் ஹாங்காங் கேப்டன் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.  அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 எடுத்த நிலையில் அன்று எந்த ஒரு கிராஸ் பேட் ஷாட்டும் மாட்டாத நிலையில் ஈசான் கான் அருமையாக  ‘ஃப்ளோட்டர்’ ஒன்றை வீசினார், ரோஹித் அதை வாரிக்கொண்டு ஸ்லாக் ஸ்வீப் ஆட முன் விளிம்பில் பட்டு எளிதான கேட்ச் ஆனது. ரோஹித்தை காலி செய்தார் ஈசான் கான்.

Also Read: டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஒன்றும் ‘பிஸ்தா’ பிளேயர் அல்ல: முன்னாள் ஸ்பின்னர் அதிரடி

அன்று ஷிகர் தவான் 127, 15 பவுண்டரி 2 சிக்சர், அம்பதி ராயுடு 70 பந்துகளில் 60, தினேஷ் கார்த்திக்கே 33 ரன்களுக்கு 38 பந்துகள் எடுத்து கொண்டார். 41வது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி   240/3 ஆனால் அதன் பிறகு இந்திய அணியை எழும்பவிடவில்லை, ஹாங்காங், குறிப்பாக எம்.எஸ்.தோனி 3 பந்துகளே தாக்குப்பிடித்தார் ரன் எதுவும் எடுக்காமல் ஈசான் கான் பந்தில் எட்ஜ் ஆகி காலியானார். அப்போது தோனி ஆட்டமிழந்ததைப் பார்த்து ஆத்திரத்தை அடக்க முடியாத, இந்திய ஜெர்சியில் இருந்த சிறுவன் தன் இருக்கையை கிழித்தது வைரலானது.

Also Read: 174/0 நினைவிருக்கிறதா?- இந்திய அணியை மிரட்டும் ஹாங்காங்- கோலிக்குப் பதில் ரிஷப் பண்ட்?

கேதர் ஜாதவ் மட்டும் 28 ரன்கள் எடுக்க புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் எல்லோரையும் மலிவாக வீழ்த்திய ஹாங்காங் 41வது ஓவரில் 240/2லிருந்து 50 ஓவர்களில் 285/7 என்று மட்டுப்படுத்தியது. கின்சித் ஷா என்பவர் 9 ஓவர் 39 ரன் 3 விக்கெட் என்று அசத்த ஈசான் கான் 2 விக்கெட்.

286 ரன்கள் இலக்கை ஹாங்காங் விரட்டியது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, குல்தீப், செஹல், ஷர்துல் ஆகியோர் இருந்தும் ஹாங்காங் தொடக்க வீரர்கள் நிசாகத் கான் (இப்போது இவர்தான் கேப்டன்), மற்றும் அப்போதைய கேப்டன் ஆன்ஷி ராத் இணைந்து இந்திய அணியை வறுத்தனர். நிசாகத் கான் 92, ஆன்ஷி ராத் 73 என்று முதல் விக்கெட்டுக்காக 174 ரன்களை சேர்த்தனர். பிறகு கலீல் அகமது மற்றும் செஹல் தலா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற 259 வரை ஹாங்காங் வந்து 26 ரன்களில் தோல்வி கண்டது. அன்று 3 விக்கெட்டுகள் எடுத்த ஹாங்காங் பவுலர் கின்சித் ஷா இந்த அணியிலும் இருக்கிறார், ஈசான் கானும் இருக்கிறார்.

இன்றைய தினம் ஹாங்காங் அணி இந்தியாவுடன் மோதும்போது ஈசான் கான் என்ற அந்த ஸ்பின்னரையும் இப்போதைய ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கானையும் நாம் நினைவில் கொள்வது எச்சரிக்கைக்காக என்பதுடன் ஹாங்காங் புறந்தள்ளக் கூடிய அணியல்ல என்பது ரோஹித் சர்மாவுக்கும் தெரியும் என்பதாலேயே.

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங்.

ஹாங்காங் அணி: நிஜாகத் கான் (கே), பாபர் ஹயாத், யாஸ்மின் முர்டாசா, கின்சித் ஷா, ஸ்காட் மெக்கெனி (வி.கீ), ஹாரூன் அர்ஷத், அய்ஜாஜ் கான், ஜீஷன் அலி, ஈசான் கான், ஆயுஷ் ஷுக்லா, முகமது கஜன்ஃபார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Hong Kong, MS Dhoni, Rohit sharma

அடுத்த செய்தி