Home /News /sports /

இவர்கள் தகுதியற்றவர்களா?: உம்ரன் மாலிக், தினேஷ் கார்த்திக் தேர்வின்மை குறித்து ஹர்பஜன் காட்டம்

இவர்கள் தகுதியற்றவர்களா?: உம்ரன் மாலிக், தினேஷ் கார்த்திக் தேர்வின்மை குறித்து ஹர்பஜன் காட்டம்

ஹர்பஜன்

ஹர்பஜன்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் சூப்பர்-4 சுற்றுடன் இந்திய அணி ஏறக்குறைய வெளியேறும் நிலையில் உள்ளதால் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அணித்தேர்வு, ரோஹித் சர்மா கேப்டன்சி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் சூப்பர்-4 சுற்றுடன் இந்திய அணி ஏறக்குறைய வெளியேறும் நிலையில் உள்ளதால் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், அணித்தேர்வு, ரோஹித் சர்மா கேப்டன்சி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

    இந்திய அணியின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், உம்ரன் மாலிக் எங்கே, தீபக் சாஹர் ஏன் இல்லை ,தினேஷ் கார்த்திக் ஏன் விட்டு விட்டு வாய்ப்பளிக்கப்படுகிறார் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி ட்விட் போட்டுள்ளார்:

    ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் கடந்த 6ம் தேதி இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்று இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

    இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.



    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததும், அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
    உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்)? . தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை (மிகச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர்)?. வாய்ப்புகள் கிடைக்க இவர்கள் தகுதியற்றவர்களா என்று நீங்கள் கூறுங்கள்? தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏமாற்றம்' என தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup india, Dinesh Karthik, Harbhajan Singh

    அடுத்த செய்தி