Home /News /sports /

இது சிக்ஸ் அடிக்கும் ஷாட் அல்ல, கேட்சிங் பிராக்டீஸ்- கோலி ஷாட் குறித்து கம்பீர் விமர்சனம்

இது சிக்ஸ் அடிக்கும் ஷாட் அல்ல, கேட்சிங் பிராக்டீஸ்- கோலி ஷாட் குறித்து கம்பீர் விமர்சனம்

விராட் கோலி - காம்பீர்

விராட் கோலி - காம்பீர்

விராட் கோலி இன்னிங்ஸை திட்டமிடாமல் இப்படி அவுட் ஆகலாமா என்று கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை 2022 போட்டியில் விராட் கோலி 35 ரன்களை எடுத்தாலும் அவரது இன்னிங்ஸ் திருப்தியளிக்கவில்லை வந்தவுடனேயே கேட்ச் கொடுத்தார், அதை பாகிஸ்தான் பீல்டர் நழுவ விட்டார், இருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லாமல் 35 ரன்களில் அலட்சியமாக தூக்கி அடித்து கேட்ச் ஆனார் கோலி.

இதோடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போன பந்துகளில் தடவினார், பீட்டன் ஆனபடியே இருந்தார், இடையிடையே ஒரு பேக்ஃபுட் பஞ்ச், ஒரு ஆன் ட்ரைவ் என்று நல்ல ஷாட்களையும் ஆடினார். கடைசியில் கேட்சிங் பிராக்டீஸ் போல் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் ஆடிய ஷாட் கடும் விமர்சனங்களை கிளப்பியது, கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளார், ராகுல் ஆட்டமிழந்துள்ளார், அப்படியிருக்கும் போது இன்னிங்ஸை திட்டமிடாமல் இப்படி அவுட் ஆகலாமா என்று கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read:  தினேஷ் கார்த்திக் கூடாது, ரிஷப் பண்ட் தான் ஆட வேண்டும்- கம்பீர் விளாசல்

கவுதம் கம்பீர் இது தொடர்பாகக் கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த ரன்கள் எவ்வளவு என்று எனக்குத் தெரியும். ரோஹித் சர்மாவின் விக்கெட் சரிந்த சிறிது நேரத்தில் விராட் கோலி அப்படி ஒரு ஷாட்டை ஆடியதால் மிகவும் ஏமாற்றமடைந்து இருப்பார். ஒரு இளம் வீரர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனங்கள் ஏற்பட்டு இருக்கும்.

நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள். உங்கள் கேப்டன் இப்போது தான் ஆட்டமிழந்தார்.  நீங்கள் உங்கள் இன்னிங்ஸை இன்னும் சற்று சிறப்பாக கட்டமைத்து விளையாடி இருந்தால், முடிவை மேலும் எளிதாகி இருக்கலாம். நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அப்போது நீங்கள் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயற்சிக்கிறீர்கள் ஆட்டமிழக்கிறீர்கள் என்றால் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கே நீங்கள் அடித்த ஷாட் சிக்ஸர் அடிக்க முயற்சிக்காமல் ஆட்டமிழந்து உள்ளீர்கள்.’  இவ்வாறு கூறினார் கம்பீர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Asia cup cricket, Gautam Gambhir, Virat Kohli

அடுத்த செய்தி