Home /News /sports /

Asia Cup: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை

Asia Cup: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை

இலங்கை வெற்றி

இலங்கை வெற்றி

Asia Cup 2022: 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiadubaidubaidubaidubaidubaidubaidubai
    ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக் காரர்களாக நிஷங்கா, மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். ரன்கள் எடுக்காமலேயே மெண்டீஸும் 8 ரன்களின் நிஷங்காவும் ஆட்டமிழந்தனர்.

    தனஞ்செயா டி சில்வா 28 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில்,  குணாதிலக, ஷனகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இலங்கை அணி பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்ததாக களம் இறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

    .அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி  170 ரன்கள் எடுத்தது. பனுகா ராஜபக்சே 45 பந்துகளில், 6 பவுண்டரி, 3  சிக்ஸர் உட்பட 71 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  பாகிஸ்தான் தரப்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட்களை எடுத்தார்.

    பின்னர், 171 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மதுஷன் பந்துவீச்சில் பாபர் அசாம் 5 ரன்களிலும்  ஃபக்ஹர் ஜமான் ரன்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 22 ரன்களுக்கு 2 விக்கெட் என பாகிஸ்தான் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், முகமது ரிஸ்வான் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போதே பாகிஸ்தான் அணியின் தோல்வி  ஏறக்குறைய  முடிவாகி விட்டது. ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.  20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup cricket, Pakistan cricket, Sri Lanka

    அடுத்த செய்தி