Home /News /sports /

ஆசியக்கோப்பை: ‘டேஞ்ஜர்’ ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு - வங்கதேசம் கஷ்டம்

ஆசியக்கோப்பை: ‘டேஞ்ஜர்’ ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு - வங்கதேசம் கஷ்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசியக் கோப்பை 2022, முதல் போட்டியில் இலங்கை அணியை 105 ரன்களுக்குச் சுருட்டி பிறகு இறங்கி 10 ஓவர்களில் இலக்கை விரட்டி 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி கடும் அதிர்ச்சியை அளித்தது ஆப்கான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • iNTER, IndiaDubaiDubai
ஆசியக் கோப்பை 2022, முதல் போட்டியில் இலங்கை அணியை 105 ரன்களுக்குச் சுருட்டி பிறகு இறங்கி 10 ஓவர்களில் இலக்கை விரட்டி 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி கடும் அதிர்ச்சியை அளித்தது ஆப்கான், அதே அதிர்ச்சி இன்று வங்கதேசத்துக்கும் காத்திருக்கிறது என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்றைய ஆசியக் கோப்பை போட்டியில் ஷார்ஜாவில் வங்கதேசம், ஆப்கான் அணிகள் மோதுகின்றன. மேலும் வங்கதேசத்தின் டி20 ஆட்டம் கடும் சரிவை சமீப காலங்களில் சந்தித்துள்ளது. அயர்லாந்துக்கு எதிராக தொடரை இழந்தனர். ஆப்கான் தொடக்க பவுலர்கள் பாசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக் அன்று இலங்கையை 5/3 என்று சரித்தனர். 105 ரன்களுக்கு சுருட்டிய பிறகு தொடக்க வீரர்களான ஹஸ்ரத்துல்லா சசாய், ரஹ்மனுல்லா குர்பாஸ் இணைந்து இலங்கை பவுலர்களை ஓட ஓட விரட்டினர்.

வங்கதேச அணிக்கு ஒரே ஆறுதல் இன்று அந்த அணிக்கு ஷாகிப் உல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் திரும்பியுள்ளனர். இவர்களோடு முகமது சைஃபுதீன் வந்திருப்பதும் அந்த அணிக்கு பலம் சேர்க்கலாம்.
கடைசி 5 டி20 போட்டிகளில் வங்கதேசம் 4-ல் தோற்றுள்ளது, மாறாக ஆப்கானிஸ்தான் அணி கடைசி 5 போட்டிகளில் 3-ல் வென்றுள்ளது. வங்கதேசத்துக்கு டேஞ்ஜர் என்றால் அது ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர் ஃபாசல்ஹக் ஃபரூக்கிதான், இவரிடம் வேகமும் துல்லியமும் உள்ளது அன்று இலங்கையை சிதைத்தார். 11/3 என்று அசத்தினார். இன்றும் இவர்தான் டேஞ்சர்.

Also Read:  பாகிஸ்தான் கதையை முடித்த அசால்ட் பாண்டியா! .. ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஷார்ஜா பிட்ச்:
மிகச்சிறிய மைதானம், ஆனால் இங்கு முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி 143 தான் உள்ளது. உஷ்ணம் கடுமையாக இருக்கும்.

உத்தேச லெவன்:

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா சசாய், ரஹ்மனுல்லா குர்பாஸ் (வி.கீ),  இப்ராஹிம் சத்ரான், கரீம் ஜனத், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி (கே), ரஷீத் கான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபாசல்ஹக் பரூக்கி.

வங்கதேசம்: முகமது நயீம், அனாமல் ஹக், ஷாகிப் அல் ஹசன், அஃபீப் ஹுசைன், முஷ்பிகுர் ரஹீம், மஹமுதுல்லா, சபீர் ரஹ்மான், மெஹதி ஹசன், முகமது சயிபுதின், நுசும் அகமது,முஸ்தபிசுர் ரஹ்மான்.
Published by:Ramprasath H
First published:

Tags: Afghanistan, Asia cup, Asia cup cricket, Bangladesh

அடுத்த செய்தி