முகப்பு /செய்தி /sports / ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 அட்டவணை வெளியீடு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 அட்டவணை வெளியீடு

ஆசியக்கோப்பை

ஆசியக்கோப்பை

  • 1-MIN READ
  • Last Updated :

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. அதில் குரூப் பிரிவு போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டியில் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் நாளை தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அதனைத் தொடர்ந்து, 23-ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது. மேலும் அன்றைய தினம் நடக்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானும் வங்கதேசமும் மோத உள்ளது. அதன்பின் செப்டம்பர் 25-ல் இந்தியா - ஆப்கானிஸ்தானும், செப்டம்பர் 26-ல் பாகிஸ்தானும் வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டிகளின் முடிவில் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றன.

First published:

Tags: Asia Cup 2018, Bangladesh and Afghanistan, India and Pakistan, Super 4 schedule