Video | என்ன மாதிரி பவுலிங் இது...? ரசிகர்களை குழப்பமடைய வைத்த அஸ்வினின் பந்துவீச்சு

திண்டுக்கல் அணி பந்துவீச்சின் போது கடைசி 2 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால், அஸ்வின் வித்தியாசமாக பந்தை வீசினார்.

news18
Updated: July 20, 2019, 12:40 PM IST
Video | என்ன மாதிரி பவுலிங் இது...? ரசிகர்களை குழப்பமடைய வைத்த அஸ்வினின் பந்துவீச்சு
அஸ்வின்
news18
Updated: July 20, 2019, 12:40 PM IST
ஐ.பி.எல் போட்டியைப் போல, தமிழக அளவில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான்காவது சீசன் போட்டிகள் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்று தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சிவீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நேற்றைய தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி ஹரி நிஷாந்தும், விக்கெட் கீப்பர் ஜெகதீசனும் திண்டுக்கல் அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஹரி நிஷாந்த் (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பையும் தாக்கியது. அடுத்து கேப்டன் அஸ்வின், ஜெகதீசனுடன் இணைந்தார். இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி ரன்களை திரட்டினர். டி.ராகுலின் பந்து வீச்சில் அஸ்வின் ஒரு சிக்சரும் பறக்க விட்டார்.

இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ஜெகதீசன் (17 ரன்) கிளன் போல்டு ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிய கேப்டன் அஸ்வின் 37 ரன்களில், முருகன் அஸ்வின் சுழலில் அவரிடமே சிக்கினார்.

Loading...
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. கில்லீஸ் தரப்பில் அலெக்சாண்டர் 3 விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கவுசிக் காந்தி (0), ஜே.கவுசிக் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கோபிநாத்தும் (4 ரன்) அதே ஓவரில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர்ராஜூவும் (0) நிலைக்கவில்லை. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஆரிப் 16 ரன்னில் (14 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார்.

29 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் சிலம்பரசன் மேலும் மிரட்டினார். சரிவில் இருந்து நிமிர முடியாமல் கடைசிவரை தடுமாறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் சிலம்பரசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

திண்டுக்கல் அணி பந்துவீச்சின் போது கடைசி 2 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால், அஸ்வின் வித்தியாசமாக பந்தை வீசினார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...