முகப்பு /செய்தி /விளையாட்டு / சமீப காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மீறியும் அஸ்வின் சாதித்துள்ளார்- கபில் தேவ்

சமீப காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மீறியும் அஸ்வின் சாதித்துள்ளார்- கபில் தேவ்

kapil dev

kapil dev

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர் சரித் அசலாங்கா 20 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர் சரித் அசலாங்கா 20 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்கள் கைப்பற்றிய அஸ்வின், கபில் தேவின் சாதனையை முறியடித்து ,இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.

இந்நிலையில், அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் என் சாதனை இன்னும் சீக்கிரமே முறியடிக்கப்பட்டிருக்கும்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய காலம் கடந்து விட்டது.

அஸ்வின் புத்தசாலித்தனமான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாண்டி அஸ்வின் அசத்தலாம் என தெரிவித்துள்ளார்.

அதே போல் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறும்போது, “அஸ்வின் டெஸ்டில் 436 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது மிகப்பெரிய மைல்கல். அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் விளையாடினால், இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ளேயில் சாதனைக்கு அருகில் வரவோ, அல்லது முறியடிக்கவோ முடியும். ஆனால் அது மிக நீண்ட பயணம் தான்".

அஸ்வின் இந்தியாவுக்காக 85 டெஸ்டில் 24.26 சராசரியுடன் 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 30 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஏழு பத்து விக்கெட்டுகள் அடங்கும். டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: India vs srilanka, R Ashwin