• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வின் பற்றி கோலி சொல்லாததை சொன்ன புதிய கேப்டன் ரோகித் சர்மா

அஸ்வின் பற்றி கோலி சொல்லாததை சொன்ன புதிய கேப்டன் ரோகித் சர்மா

அஸ்வின்

அஸ்வின்

டி20 போட்டியின் நடு ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி அசத்துகிறார் அஸ்வின் என, புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

  • Share this:
    டி20 போட்டியின் நடு ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி அசத்துகிறார் அஸ்வின் என, புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலி அஸ்வினை அணியில் எடுக்காமல் ஒழித்ததோடு அஸ்வின் பிரமாதமாக வீசும்போது கூட மனதார புகழ்ந்து பேசவும் மாட்டார்.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 187/4, என்று ரன்கள் குவித்து, 73 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடரை 3-0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

    அஸ்வின், 2 போட்டிகளில் 4 ஓவர் 23 ரன், என்றும் 2வது போட்டியில் 4 ஓவர் 19 ரன் என்றும் 42 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு பின், சர்வதேச 'டி-20' போட்டிக்கு திரும்பிய இவர், சமீபத்தில் முடிந்த 'டி-20' உலக கோப்பையில் 3 போட்டியில், 6 விக்கெட் சாய்த்தார். 2வது போட்டியில் நியூசிலாந்து ஸ்கோர் 6 ஓவர்களில் 64 ரன்கள் என்று இருந்த நிலையில் அஸ்வின் புகுந்து கட்டுப்படுத்தியதில் மேட்சே திரும்பியது.

    இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, “நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. இத்தொடரில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முதலிரண்டு போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான துவக்கம் தந்தனர். அதன்பின் எழுச்சி கண்ட நமது பவுலர்கள் நியூசிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

    குறிப்பாக 'மிடில்-ஓவரில்' சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் நம்பிக்கை அளித்தார். இவரை போன்ற திறமையான பவுலர்கள் அணியில் இருக்கும்பட்சத்தில், 'மிடில்-ஓவரில்' எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுவார். நான்கு ஆண்டுகளுக்கு பின், 'டி-20' போட்டிக்கு திரும்பிய இவரிடம் திறமை குறையவில்லை.

    டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுகிறார். ஒருநாள், 'டி-20' போட்டிகளில் இவரது செயல்பாடு மோசமாக இல்லை. அக்சர் படேலுடன் இணைந்து நியூசிலாந்து பேட்டர்களுக்கு நெருக்கடி தந்த விதம் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: