கருப்பினத்தவர், இந்தியர்கள், ஆசியர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசைபாடும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து அஸ்வின் கடும் வேதனையுடன் பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் குறிப்பாக ரசிகர்களில் ஒருபிரிவினர் படுமோசமாக நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அன்று பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசையை, கேலியைக் கட்டவிழ்த்து விட்டனர் சிட்னி ரசிகர்கள், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் சீரியசாகப் பார்க்கப்படும் விஷயம், புகார் தெரிவித்தால் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இந்திய அணி நிர்வாகம் புகார் அளித்து விட்டது.
இந்நிலையில் அஸ்வின் கூறியது என்னவெனில், “இது சிட்னிக்கு எனது 4வது தொடர், கடந்த கால நிறவெறி அனுபவங்களும் உண்டு. வீரர்களும் இதற்கு வினையாற்றி பிரச்சனைகளில் சிக்கியதுண்டு. ஆனால் வீரர் அதற்குக் காரணமல்ல. ரசிகர்கள் பேசும் விதம் அப்படி. குறிப்பாக எல்லைக்கோட்டருகே இருக்கும் ரசிகர்கள் நிறவெறி வசையை கட்டவிழ்த்து விடுவார்கள்.
அவர்கள் படுமோசமானவர்கள். ஆனால் இப்போது ஒரு படி மேலே போய் நிறவெறி வசைகளில் ஈடுபட்டனர். நடுவர்களும் இத்தகைய சம்பவங்களை உடனடியாக புகார் செய்யுமாறு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தக் காலத்தில் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, நாம் நிறையப் பார்த்து விட்டோம். நாம் ஒரு நாகரிக சமூகமாக வளர்ந்திருக்கிறோம். இதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ரசிகர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து இதைச் ச்செய்து வருகின்றனர், அவர்களில் ஒருவர் கூட இதனை எதிர்ப்பதில்லை. ஏமாற்றமளிக்கிறது என்பது மிகவும் மென்மையான வார்த்தை.
2011-12 தொடரை எடுத்துக் கொண்டால், எனக்கு இது என்னவென்றே புரியவில்லை. நிறவெறி வசை என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை. அவ்வளவு பேர் முன்னால் நம்மையே நாம் சிறுமையாக உணரவைக்கும் படுமோசமான வசைகள். நம்மை யாராவது கேலியோ, கிண்டலோ, செய்தால் நிறவெறி வசையை மற்றவர்கள் ரசித்து மகிழ்கின்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எல்லைக்கோட்டருகே நின்றால் இவர்கள் பேசும் நிறவெறிப் பேச்சு நம்மை 10 அடி தள்ளி நிற்குமாறு அருவருப்படைய வைக்கிறது. இவற்றை அடக்கி ஒடுக்க வேண்டும்” என்றார் அஸ்வின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Racism, Sydney