தனிமையிலே... - அஸ்வின் புகைப்படம் வைரல்

தனிமையில் அஸ்வின்.

இந்தியா-இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட்களுக்கு அஸ்வினைத் தேர்வு செய்யாமல் இல்லாத சாக்குப்போக்குகளைச் சொல்லி பிடிவாதம் பிடித்து வருகிறார் கோலி. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் தனியாக அஸ்வின் அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 • Share this:
  சோகத்துடன் தனி ஆளாக அமர்ந்து போட்டியைப் பார்த்த அஸ்வினுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். ஆனால், ஜடேஜாவுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் இதே ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்காக கவுண்டி அணியில் விளையாடிய அஸ்வின், சோமர்செட் அணிக்காக 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் மறுக்க முடியுமா?

  அடுத்ததாக மான்செஸ்டரில் வேண்டுமென்றே வாய்ப்பு கொடுத்து அஸ்வின் மேல் கடும் அழுத்தம் ஏற்படும், கோலி என்ன செய்வார், நான் வாய்ப்பு கொடுத்து விட்டேன் அவர்தான் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதை கூறாமல் புரிய வைக்க முயற்சி செய்வார். இதுதான் கோலியின் டெக்னிக்.

  79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 3-வது இடத்தில் இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட காரணம் என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். இந்நிலையில் அவர் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலர் கோலியை கடுமையாகச் சாடி வருகின்றனர்.

  கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 93 ஓவர்கள் வீசி 222 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். நம்பர் 2 பவுலரை உட்கார வைக்க என்ன தைரியம் ஈகோ இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோலியை விமர்சித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: