Home /News /sports /

லெஜண்ட் முத்தையா முரளிதரனை நெருங்கும் ‘மேஜிக்’ அஸ்வின்

லெஜண்ட் முத்தையா முரளிதரனை நெருங்கும் ‘மேஜிக்’ அஸ்வின்

Ravichandran Ashwin

Ravichandran Ashwin

14 விக்கெட்களை கைப்பற்றியது மட்டுமின்றி, பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாக 9வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியாவில் ஆடுவதென்றால் அஸ்வினுக்குக் குஷிதான் மிக மிக சாதகமான ஆட்டக்களங்களில் வெளுத்து வாங்குவார் எப்போதும். இந்த முறையும் நியூசிலாந்து அணியை தனது விரல் மேஜிக்கில் கவிழ்த்தார்.

    14 விக்கெட்களை கைப்பற்றியது மட்டுமின்றி, பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாக 9வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் வீரர், சுழற்பந்துவீச்சு ஜாம்பவான், முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அஸ்வின் 9 முறை டெஸ்ட் போட்டிகளில் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

    சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார்.

    அதேபோல, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடம்பிடித்தார். அவர் இந்தியாவில் 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 300 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். வெளிநாடுகளில் 31 டெஸ்ட்களில் 123 விக்கெட்டுகளையும் நடுநிலை மைதானத்தில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் 88 விக்கெட்டுகள். நியூசிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் அஸ்வின்.

    Also Read: Virat Kohli| சபாஷ் விராட் - கோலி வந்த பிறகு இத்தனை வெற்றிகளா?- சாதனைத் துளிகள்

    இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து அசத்திய மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் உள்ள கௌரவப் பலகையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.

    மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி உள்ளது.

    அதேபோல, நியூசிலாந்து அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs New Zealand, R Ashwin

    அடுத்த செய்தி