2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு வங்கதேசம் கடும் நெருக்கடி கொடுத்ததாக ஆல்ரவுண்டர் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது.
‘முதல் டெஸ்ட் ஆட்ட நாயகன் குல்தீப் யாதவை நீக்கியது சரியான முடிவுதான்’ – கே.எல்.ராகுல் விளக்கம்
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் உடன். ஆல்ரவுண்டர் அஷ்வின் இணைந்தார். இன்னும் 71 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், பொறுப்பை உணர்ந்து இந்த இணை சிறப்பாக விளையாடியது. இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றிக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருதை பெற்ற ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது-
வங்கதேச மைதானம் அருமையாக உள்ளது. வங்கதேச அணியை பாராட்டியாக வேண்டும். இந்த முக்கியமான நேரத்தில், இந்திய அணிக்கு அவர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள்.
2022 – ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்கள்… ஐ.பி.எல்-க்கு முதலிடம்
எங்களுக்கு விக்கெட்டுகள் குறைவாக இருந்தன. கொஞ்சம் கவனக்குறைவாக விளையாடினாலும் ஆட்டம் நம் கையை விட்டு போய்விடும். அத்தகைய ஆட்டமாக இந்த இன்னிங்ஸ் அமைந்து விட்டது. ஷ்ரேயாஸ் அற்புதமாக பேட் செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.