• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின்தான் மேட்ச் வின்னர்: மான்ட்டி பனேசர் நம்பிக்கை

நியூசிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின்தான் மேட்ச் வின்னர்: மான்ட்டி பனேசர் நம்பிக்கை

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

ஜூன் 18ம் தேதி இந்தியா-நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது, இதில் அஸ்வின் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று மாண்ட்டி பனேசர் கூறியுள்ளார்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் இடது கை வீரர்களுக்கு இந்திய ஆஃப் ஸ்பின்னர் அதிக தொல்லைகள் கொடுப்பார் என்று இங்கிலாந்தின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி, இந்தியாவுக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே சவுதாம்டன் நகரில் நடக்கவுள்ளது. அஸ்வின் எடுத்த மொத்த விக்கெட்டுகளில் 200 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மென்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நியூஸிலாந்து அணியில் அதிகம் இடது கை வீரர்கள் இருப்பது அஸ்வினுக்கு சாதகமானது என்று பனேசர் தெரிவித்துள்ளார்.

    “நியூஸிலாந்து சிறப்பான அணி. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கான்வேயின் ஆட்டம் அபாரம். அவர்களிடம் சில இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு இந்தியாவின் ஆப் ஸ்பின்னர் அஸ்வின் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார். இங்கிலாந்தில் பலரும் நினைப்பதை விட நியூஸிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது. உலகின் முதன்மை அணியைப் போல ஆடி வருகிறது. இந்தியாவுடனான ஆட்டம் நிச்சயம் கிரேட் டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது. இந்தியாவுக்கும் இந்த இறுதிப் போட்டி எளிதான போட்டியாக இருக்காது.

    அதே நேரம், வானிலை, நியூஸிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேன்களைப் பார்க்கும்போது இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வினின் செயல்பாடே பிரதானமாக இருக்கும். அவர்தான் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசமாக இருக்கப் போகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அஸ்வினால் இடது கை பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்தினால் அந்த அணிக்குப் பிரச்சினை நேரிடும். இல்லையென்றால் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். இந்தியாவில் வீசுவதைப் போலவே அஸ்வின் வீசினால் கண்டிப்பாக இந்தியா வலிமையான நிலையில் இருக்கும்.

    அதே போல் நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி வித்தியாசம் ஏற்படுத்தும் பவுலர். இங்கிலாந்தில் வெயில் அடிப்பதால் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் இறங்க வாய்ப்புள்ளது, விராட் கோலி நிச்சயம் ஜடேஜாவை அணியில் வைத்துக் கொள்ள விரும்புவார்” என்றார் பனேசர்.

    அஸ்வினை ஆல் டைம் கிரேட் பட்டியலில் சேர்க்க முடியாது என்று மஞ்சுரேக்கர் கூறியுள்ள நிலையில் பனேசரின் இந்த மதிப்பீடு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: