800 விக். வீழ்த்திய உலக சாதனை மன்னன் முரளிதரனின் ஒரு சாதனையை முறியடித்த அஸ்வின்

800 விக். வீழ்த்திய உலக சாதனை மன்னன் முரளிதரனின் ஒரு சாதனையை முறியடித்த அஸ்வின்

ரவிசந்திரன் அஸ்வின்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்த அஸ்வினுக்கு இன்னொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. அடிலெய்டிலும் அவர் பிரமாதமாக வீசினார்.

 • Share this:
  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்த அஸ்வினுக்கு இன்னொரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. அடிலெய்டிலும் அவர் பிரமாதமாக வீசினார்.

  ஆஸ்திரேலிய பிட்ச்களில் கிடைக்கும் பவுன்ஸுக்குத் தக்கவாறு பந்துகளை நன்றாக தூக்கி வீசி கொஞ்சம் வேகத்தைக் குறைத்து வீசுவதால் பந்து எழும்பி திரும்பும் நிலையை நாம் அஸ்வினிடம் பார்க்கிறோம். இதோடு ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனிலேயே எதிர்ப்புறம் திரும்பும் ராங் ஒன் என்பதையும் அஸ்வின் பிரமாதமாக வீசி வருகிறார். அப்படித்தான் அடிலெய்டில் ஸ்ம்த்தையும் மெல்போர்னில் லபுஷேனையும் காலி செய்தார்.

  ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த வீரர்களான லபுஷேன், ஸ்மித் ஆகியோரை இந்தத் தொடரில் இது வரை அடக்கி ஆண்டு வருகிறார், அஸ்வின். இவர்கள் இருவரும் வலது கை வீரர்கள்.

  ஆனால் மெல்போர்னில் ஜோஷ் ஹேசில்வுட்டை கிளீன் பவுல்டு செய்தபோது இடது கை பேட்ஸ்மென்களை வீழ்த்துவதில் புதிய சாதனையைப் படைத்தார் அஸ்வின்.

  அஸ்வின் இதுவரை 192 இடது கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார், இது இலங்கையின் முத்தையா முரளிதரனின் 191 பேரை விட சிறந்ததாகும். அஸ்வின் 73 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 25.22 சராசரியாக 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளையும், தற்போது நடைபெற்று வரும் மெல்போர்ன் டெஸ்டில் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

  இடது கை பேட்ஸ்மேன்களை அதிக ஆட்டமிழக்க செய்தவர்கள் பட்டியலில் உள்ள மற்ற பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (186), கிளென் மெக்ராத் (172), ஷேன் வார்னே (172) மற்றும் அனில் கும்ப்ளே (167).

  டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டிலியலில் மூன்றாவது இடத்தில் அஸ்வின் உள்ளார், ஹர்பஜன் சிங் (417), அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு பின்னால் உள்ளார். அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களில், கும்ப்ளே, கபில் தேவ் (434), ஹர்பஜன் ஆகியோருக்குப் பிறகு அஸ்வின் நான்காவது இடத்தில் உள்ளார்.
  Published by:Muthukumar
  First published: