1000 ரன்கள், 100 விக்கெட்: அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு எதிராக கபில் தேவுக்குப் பிறகு அஸ்வின் சாதனை

1000 ரன்கள், 100 விக்கெட்: அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு எதிராக கபில் தேவுக்குப் பிறகு அஸ்வின் சாதனை

அஸ்வின் சாதனை. அரைசதம் விளாசல்.

29வது முறையாக 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றி கிளென் மெக்ராவின் சாதனையையும் சமன் செய்தார்.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்கு எதிராக 1000 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீரர்களில் கபில்தேவுக்கு அடுத்தபடியாக அஸ்வின் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

  சென்னை டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சற்று முன் வரை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 5 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

  விராட் கோலி 122 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இந்திய அணி 372 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  இங்கிலாந்து இந்தப் பிட்சில் ஜெயிப்பது கடினம். பிட்சில் பந்து பட்டாலே மண்ணைப் பெயர்த்துக் கொண்டு வருகிறது, குழிப்பிட்சில் கோலி அபாரமாக ஆடுகிறார், அஸ்வின் ஆக்ரோஷமாக ஆடுகிறார். இங்கிலாந்து அட்டாக் செய்யத் தவறி களவியூகத்தை தள்ளி போட்டு விட்டது, இதனால் இப்போது எளிதாகி விட்டது போல் தோன்றும், ஆனால் பிட்சில் குழியில் பூதம் உயிருடன் இருக்கிறது.

  இந்நிலையில் அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும் 1000 ரன்களையும் எடுத்து டபுள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

  கபில்தேவ் இங்கிலாந்துக்கு எதிராக 1804 ரன்களையும் 113 விக்கெட்டுகளையும் 50 போட்டிகளில் எடுத்துள்ளார். ஆனால் அஸ்வின் 45 போட்டிகளில் 106 விக்கெட்டுகளை 1014 ரன்களை எடுத்துள்ளார்.

  இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி, ஆகியோர் 1000 ரன்களுக்கும் மேல் எடுக்க அனில் கும்ப்ளே மட்டும்தான் 117 விக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்துள்ளார்.

  முன்னதாக நேற்று அஸ்வின் இந்தியாவில் தன் 350வது சர்வதேச விக்கெட்டைக் கடந்தார். 29வது முறையாக 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றி கிளென் மெக்ராவின் சாதனையையும் சமன் செய்தார்.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்ட அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகளே மீதமுள்ளன.
  Published by:Muthukumar
  First published: