முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட அக்சர் படேல் – அஷ்வின்… 8ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்…

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட அக்சர் படேல் – அஷ்வின்… 8ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்…

அஷ்வின் - அக்சர் படேல்

அஷ்வின் - அக்சர் படேல்

நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும் அஷ்வின் – அக்சர் படேல் இணை தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டைப் போலவே 2ஆவது டெஸ்டிலும் ஆல் ரவுண்டர்கள் அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2ஆவது டெஸ்ட் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்துள்ளது. இது குறைவான ரன் என கருதப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் தடுமாறியது.  44 ரன்கள் சேர்த்த விராட் கோலியை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கே.எல்.ராகுல் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். கேப்டன் ரோஹித் 32 ரன்னிலும், ராகுல் 17 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த புஜாரா ரன் ஏம் எடுக்காமலும், கோலி 44 ரன்னிலும் ஆட்டடிமழந்தனர். ரவிந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.

139 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோது அஷ்வின் – அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அஷ்வின் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த அக்சர் படேல் 74 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இருவரும் 8ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 83.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழநத இந்திய அணி 262 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும் அஷ்வின் – அக்சர் படேல் இணை தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர். அவ்வப்போது பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து ரசிகர்களை அக்சர்படேல் உற்சாகத்தில் ஆழ்த்தினார். 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை இந்த இன்னிங்ஸில் அடித்துள்ளார் அக்சர் படேல். நாக்பூர் டெஸ்டில் 174 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 84 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களின் பாராட்டை தேடித் தந்துள்ளது. அஷ்வின் – அக்சர் படேலின் பார்ட்னர்ஷிப் சரியாக அமைந்திராவிட்டால்  இந்தியா 200 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Cricket