ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ஆஷிஷ் நெஹ்ரா?

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா ஆஷிஷ் நெஹ்ரா?

ஆஷிஷ் நெஹ்ரா, விராட் கோலி.

ஆஷிஷ் நெஹ்ரா, விராட் கோலி.

இந்திய அணியின் கேப்டன்சிக்கு அங்கு பெரிய பவர் கேமே நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா இந்திய டி20 அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக மிகவும் பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். பும்ராவிடம் கேப்டன்சி திறமையைப் பார்க்கும் ஆஷிஷ் நெஹ்ரா ஒருவேளை தன் நிறைவேறாத கனவை பும்ரா மேல் புரொஜெக்ட் செய்து நிறைவேற்றுக் கொள்கிறாரோ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய அணியின் கேப்டன்சிக்கு அங்கு பெரிய பவர் கேமே நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா இந்திய டி20 அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக மிகவும் பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். பும்ராவிடம் கேப்டன்சி திறமையைப் பார்க்கும் ஆஷிஷ் நெஹ்ரா ஒருவேளை தன் நிறைவேறாத கனவை பும்ரா மேல் புரொஜெக்ட் செய்து நிறைவேற்றுக் கொள்கிறாரோ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

  டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்திய அணி. இத்துடன் விராட் கோலியின் டி20 கேப்டன்சியும் முடிவுக்கு வந்தது, ரவிசாஸ்திரியின் தலைமைப் பயிற்சிப் பீடமும் இனி இல்லை. இந்நிலையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் என்றெல்லாம் விவாதம் போக ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்கச் சொல்லியிருப்பது உண்மையில் புரியாத புதிராக உள்ளது. பும்ராவுக்கு பாவம் கேப்டன்சி பற்றி என்ன தெரியும் என்ற சிந்தனையே இல்லாமல் பேசியுள்ளாரா நெஹ்ரா?

  இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, “இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், கே.எல் ராகுலின் பெயர்கள் அடிபடுகின்றன. என்னை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்த பதவிக்கு நியமித்தால் பொருத்தமாக இருக்கும். அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். போட்டியை நன்றாக புரிந்து செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை கூறிவந்தாலும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சி வர வேண்டும் என்று மும்பை லாபிக்கள் விரும்புகின்றன. விராட் கோலியை விட ரோகித் சர்மா எல்லோரும் அணுகக்கூடிய கேப்டன் என்கின்றனர், இளம் வீரர்கள் ரோகித் சர்மாவை அதிகம் விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.

  களத்தை தவிர போட்டி இல்லாத நேரங்களில் கோலியை பிடிப்பது கடினம் என்கின்றது சில ஊடகங்கள், தோனியின் அறை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்கிறது இன்னொரு ஊடகம், ஆனால் கோலி அப்படியில்லை, ரோகித் சர்மாவிடம் தோனியின் தன்மை இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில் இப்போது மிகவும் விசித்திரமான ஒரு தெரிவாக பும்ராவை கேப்டன்சிக்கான வீரர் என்று நெஹ்ரா கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

  பும்ரா இப்போதுதான் கற்றுக் கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கிறார். கபில்தேவ் 1978-ல் வந்து 82-ல் கேப்டன்சி பெற்றாரே என்றால் கபில் கதையே வேறு, பும்ரா கதையே வேறு. கபில்தேவ் அளவுக்கு ஆகிருதி உடையவர் அல்ல பும்ரா இவையெல்லாம் ஆஷிஷ் நெஹ்ராவுக்குத் தெரியாதா என்ன? ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்பது போல் இதைக் கூறியதுபோல்தான் தெரிகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Indian team, T20 World Cup