Home /News /sports /

‘கப்பா’வுல நான் ஆடியிருந்தேன்னா நடந்திருக்கறதே வேற- ஒதுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஆவேசம்

‘கப்பா’வுல நான் ஆடியிருந்தேன்னா நடந்திருக்கறதே வேற- ஒதுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஆவேசம்

இங்கிலாந்துக்கு கடும் பின்னடைவு

இங்கிலாந்துக்கு கடும் பின்னடைவு

2019-க்கு பிறகு இங்கிலாந்து இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் ஆசியாவுக்கு வெளியே ஆடாத போது அவரை எப்படி அணியில் எடுக்க முடியும் அதுவும் கிரீன் டாப் கப்பா பிட்சில் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் கடுமையாக எகிறியுள்ளார்

    ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் இங்கிலாந்தின் படுதோல்வியில் முடிந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த தொடக்க பவுலிங் ஜோடியான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் அனாவசியமாக உட்கார வைக்கப்பட்டு, தண்டமாக ஜேக் லீச்சை அணியில் எடுத்தார் ஜோ ரூட், இது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

    கப்பா என்று அழைக்கப்படும் பிரிஸ்பனில் தான் மட்டும் ஆடியிருந்தால் நடந்திருக்கறதே வேற என்று இப்போது ஸ்டூவர்ட் பிராட் கடுமையாக பத்திரிகை ஒன்றில் பத்தி எழுதியுள்ளார்.

    மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகையில் ஸ்டூவர்ட் பிராட் எழுதியிருப்பதாவது: “ஆஷஸ் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். கப்பாவில் பவுலிங் போடுவதை மிகவும் நேசிக்கிறேன். அந்தப் பிட்சில் நிச்சயம் என்னால் ஒரு நம்பிக்கைக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.

    ஆண்டர்சன் - பிராட்.


    அதுவும் என்னுடைய ரோல் என்னவென்று என்னிடம் கூறப்பட்ட வரையில் நான் 100% கப்பாவில் ஆட தயாரான மனநிலையில் இருந்தேன், மனத்தளவில் முழு தயாரிப்பில் இருந்தேன். புதிய பந்தில் வீசும் வீச்சாளனாக உயர் மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிலபல நெருக்கடியான பந்துகளை வீச வேண்டும், அதற்கும் நான் தயாராகவே இருந்தேன்.

    ஆனால் என்னை உட்காரவைத்தது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது, ஆஷஸ் தொடர் என்பது மாராத்தான் ஓட்டம் போன்றது, 100 மீ, 200மீ., ஸ்பிரிண்ட் அல்ல என்பதையும் நான் உணர்ந்திருக்கிறென்” என்று ஸ்டூவர்ட் பிராட் ஆவேசமாக எழுதியுள்ளார்.

    Also Read: Ashes 2021-22| அடிலெய்ட் டெஸ்ட்டில் இங்கிலாந்து ஜெயிக்கும்- ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் விலகல்

    2019-க்கு பிறகு இங்கிலாந்து இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் ஆசியாவுக்கு வெளியே ஆடாத போது அவரை எப்படி அணியில் எடுக்க முடியும் அதுவும் கிரீன் டாப் கப்பா பிட்சில் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் கடுமையாக எகிறியுள்ளார். இதோடு ஜாக் லீச்சை எக்ஸ்போஸ் செய்ததன் மூலம் ஆஷஸ் தொடரில் இனி வெற்றி பெறும் வாய்ப்பையேயல்லவா கோட்டை விட்டு விட்டார்கள் என்று சாடியுள்ளார் புட்சர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி