ஆஷஸ் தொடர்: 4-வது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா... ஆட்டநாயகன் விருது வென்ற ஸ்மித்

news18
Updated: September 9, 2019, 7:26 AM IST
ஆஷஸ் தொடர்: 4-வது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா... ஆட்டநாயகன் விருது வென்ற ஸ்மித்
ஸ்மித்
news18
Updated: September 9, 2019, 7:26 AM IST
ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அனிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இரட்டை சதமடித்து ஸ்டீவன் ஸ்மித் அசத்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


சவாலான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ரன்கள் சேர்த்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

முடிவில் 197 ரன்களுக்குள் சுருண்டதால் 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இப்போட்டியில் இரட்டைச் சதம் உட்பட மொத்தம் 293 ரன்களைக் குவித்த ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனானார்.ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 12-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் தொடர் சமநிலையையே எட்டும். ஏற்கனவே கடந்த தொடரை ஆஸ்ரேலியா வென்றுள்ளதால் ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்துள்ளது

Also watch

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...