Home /News /sports /

Ashes 2021-22, 1st test: பென் ஸ்டோக்ஸின் 14 நோ-பால்கள் கண்டுகொள்ளப்படவில்லை: ஃப்ரீயாக விட்ட நடுவர்கள்

Ashes 2021-22, 1st test: பென் ஸ்டோக்ஸின் 14 நோ-பால்கள் கண்டுகொள்ளப்படவில்லை: ஃப்ரீயாக விட்ட நடுவர்கள்

ஸ்டோக்ஸ் வீசிய நோ-பால்

ஸ்டோக்ஸ் வீசிய நோ-பால்

14நோ-பால்களை வீசினார் பென் ஸ்டோக்ஸ் ஒன்றுதான் நோ- பால் என்று தீர்ப்பானது. 

    பிரிஸ்பனில் நடைபெறும் ஆஷஸ் தொடர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெடித்தது நோ-பால் சர்ச்சை. பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் 3 முறை நோ-பால் வீசி தேர்டு அம்பயர் கண்டு கொள்ளவில்லை. 14நோ-பால்களை வீசினார் பென் ஸ்டோக்ஸ் ஒன்றுதான் நோ- பால் என்று தீர்ப்பானது.

    கடைசியில் டேவிட் வார்னரை பென் ஸ்டோக்ஸ் கிளீன் பவுல்டி செய்தார், ஆனால் அது நோ-பால் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. புதிய நடைமுறைகளின் படி நோ-பால்களை தேர்ட் அம்பயர்தான் பார்த்துச் சொல்ல வேண்டும், ஆனால் அந்த சிஸ்டம் ரிப்பேர் ஆனதால் அவரால் நோ-பால்களை பார்த்து தீர்ப்பளிக்க முடியவில்லை என்பது பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.



    பிறகுதான் தெரிந்தது முன் காலை கிரீசுக்கு வெளியே வைத்து போடும் நோ-பால்களைக் கணிக்கும் தொழில்நுட்பம் மேட்சுக்கு முன்னமேயே பழுதானது. இதனால் விக்கெட் விழும் பந்துகள் நோ-பாலா என்பதைப் பார்க்கும் முந்தைய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பென் ஸ்டோக்ஸ் தன் முதல் 5 ஓவர்களில் 14 நோ-பால்களை வீசினார், ஒன்றுதான் நோ-பால் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.



    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகளின் படி ஒவ்வொரு பந்தையும் டிவி அம்பயர் செக் செய்ய வேண்டும். இதைத்தான் ஐசிசி முன்னாள் சிறந்த நடுவர் சைமன் டாஃபலும் கூறுகிறார், “ஒவ்வொரு பந்தையும் எல்லா பந்தையும் நோ-பாலா என்று அவர்கள் செக் செய்ய வேண்டும். என்னால் இங்கு நடப்பதை விளக்க முடியவில்லை என்று சாடியுள்ளார்.

    Also Read: Ashes 2021: நோ-பால் பவுல்டு, கேட்ச் டிராப்: வார்னரின் அதிர்ஷ்டம் - இங்கிலாந்தை வாட்டும் ஆஸ்திரேலியா

    பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்ல ஆலி ராபின்சன் வீசிய நோ-பால்களும் நோ-பால் என்று அழைக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா இப்போது பிரிஸ்பன் டெஸ்ட் 2ம் நாள் ஆட்டத்தில் 306/7 என்று ஆடி வருகிறது. ட்ராவிஸ் ஹெட் 70 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்சர்களுஅன் 86 ரன்கள் என்று புரட்டி எடுத்து வருகிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Ben stokes

    அடுத்த செய்தி