• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tim Paine | கேப்டன்சியை உதறினார் டிம் பெய்ன்- பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது அம்பலம்

Tim Paine | கேப்டன்சியை உதறினார் டிம் பெய்ன்- பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது அம்பலம்

டிம் பெய்ன்

டிம் பெய்ன்

  • Share this:
    ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தனது கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தார். ஆஷஸ் தொடருக்கு அவரைத்தான் கேப்டனாக நியமித்தனர், ஆனால் திடீரென அம்பலமான பாலியல் முறைகேடு சம்பவத்தினால் தான் கேப்டன்சியை உதறுவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் டிம் பெய்ன்.

    அதாவது பெண் ஒருவருக்கு தன் உடலை முழுதும் காட்டும் புகைப்படம் மற்றும் அதோடு சில பாலியல் ரீதியான தகாத வார்த்தைகளையும், உறவு கொள்ள அழைக்கும் ஆபாச வார்த்தைகளையும் மெசேஜாக சக பணியாளர் ஒருவருக்கு டிம் பெய்ன் 2017-ம் ஆண்டு அனுப்பியதாக புகார் எழ, வெளியில் அம்பலமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணையை மேற்கொண்டுள்ளது. பப்ளிஷ் செய்ய முடியாத அளவுக்கு ஆபாச மெசேஜ் என்று ஹெரால்ட் சன் கூறுகிறது.

    36 வயதாகும் டிம் பெய்ன், பால் டேம்பரிங் ஊழலையடுத்து ஆஸ்திரேலிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இன்று வெட்கக்கேடான ஒரு புகாரில் அவர் கேப்டன்சியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் கேப்டன்சியை ராஜினாமா செய்யும் முடிவுடன் செய்தியாளர்களை சந்தித்த போது உடைந்து அழுதுவிட்டார் டிம் பெய்ன், ஆனால் அணியில் நீடிப்பேன் என்று கூறியுள்ளார் டிம் பெய்ன்

    இது தொடர் பாக அவர் கூறும்போது, “ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை உதறுகிறேன், கடினமான முடிவு ஆனால் நான் ,என் குடும்பம், ஆஸ்திரேலியா கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சரியான முடிவு. 4 ஆண்டுகளுக்கு முன்பாக சக பணியாளர் ஒருவருக்கு அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ் தொடர்பாக ராஜினாமா செய்கிறேன்.

    4 ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறக்கமிட்டி விசாரணையில் நான் முழுதும் ஒத்துழைப்பு அளித்தேன். அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்தை விதிமுறைகளை நான் மீறவில்லை என்றே தீர்ப்பளித்தார்கள். ஆனால் இன்றளவிலும் கூட நான் இந்த செய்கைக்காக வருந்தி வருகிறேன். அப்போது என் மனைவி, குடும்பத்துடன் பேசினேன், அவர்கள் என்னை மன்னித்து விட்டது கடவுள் காட்டிய கருணை.

    சமீபத்தில்தான் இந்த விவகாரம் வெளியே வரப்போகிறது என்பதை அறிந்தேன். 2017-ல் நான் நடந்து கொண்ட இந்த தகாத சம்பவத்தினால் ஆஸ்திரேலிய கேப்டன் என்ற என் தகுதியை இழக்கிறேன். இதனால் ஏற்படும் காயம் மற்றும் வருத்தங்களுக்கு நான் ஆழமாக வருந்துகிறேன். விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனவே கேப்டன்சியை உதறுவது சரியான முடிவெடுத்து உடனடியாக விலகுகிறேன்.

    ஆனால் நான் ஆஸ்திரேலிய அணியில் வீரராகத் தொடர விரும்புகிறேன். மிகபெரிய ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி” என்று டிம் பெய்ன் கூறியுள்ளார்.

    ஹெரால்ட் சன் செய்திகளின் படி 2017 பிரிஸ்பன் டெஸ்ட்டின் போது பரிமாறப்பட்ட டெக்ஸ்ட் மெசேஜ்கள் ஆகும். மெசேஜ்கள் மிகவும் ஆபாசமென்பதால் பப்ளிஷ் செய்ய தகுதியற்றவை என்கிற்து ஹெரால்ட் சன். ஆனால் ஒரு பெண்ணிடம் மிக மோசமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அதாவது தன் நிர்வாணப்புகைப்படத்தை அனுப்பியுள்ளார் டிம் பெய்ன், இதோடு தன் ஆணுறுப்பை மட்டும் படம் பிடித்து அனுப்பியதாகவும் ஹெரால்ட் சன் கூறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: