முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes 4th test day 3 | கிளீன் பவுல்டு ஆகியும் ஸ்டோக்ஸ் நாட் அவுட், நோ-பால் இல்ல- பின் எப்படி?- சிட்னியில் ஆஸி. ஆதிக்கம்

Ashes 4th test day 3 | கிளீன் பவுல்டு ஆகியும் ஸ்டோக்ஸ் நாட் அவுட், நோ-பால் இல்ல- பின் எப்படி?- சிட்னியில் ஆஸி. ஆதிக்கம்

பவுல்டு ஆகியும் தப்பிய ஸ்டோக்ஸ் அரைசதம்

பவுல்டு ஆகியும் தப்பிய ஸ்டோக்ஸ் அரைசதம்

  • Last Updated :

ஆஷஸ் தொடர் 2021-22 தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் 418 ரன்களுக்கு எதிராக இங்கிலாந்து அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் இந்தத் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 51 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களுடனும ஆடி வருகின்றனர், முன்னதாக இங்கிலாந்து ஹசீப் ஹமீது(6), ஜாக் கிராலி (18), டேவிட் மலான் (3), ஜோ ரூட் (0), ஆகிய 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்து 36/4 என்று பாலோ ஆன் அபாயத்தில் இருந்தது, இப்போது பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இணைந்து 99 ரன்களை இதுவரை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ஹசீப் ஹமீது தன் உடலை விட்டு மட்டையை தள்ளி வைத்து ஆடுகிறார், மேலும் பின் காலை நகர்த்தும் போது குறுக்காக நகர்த்தாமல் நேரே நகர்த்துகிறார். இதனால் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்று மிடில் ஸ்டம்புக்கு உள்ளே வந்த போது இவரால் பந்தை ஆட முடியாமல் ஸ்டம்பைப் பதம்பார்த்தது.

ஜாக் கிராலி 55 பந்துகள் போராடினார் கிரீசில் கடும் அடிகளை வாங்கி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெல்போர்ன் நாயகன் போலண்ட் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி உள்ளே கொண்டு சென்றார் ஸ்டம்ப் காலி. டேவிட் மலான் 3 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் கிரீன் பந்து ஒன்று லெக் ஸ்டம்ப் நோக்கி குறுக்காகச் செல்ல லெக் ஸ்லிப் நிறுத்தப்பட்டிருந்தும் அதைத் தொட்டு லெக் திசையில் தேவையில்லாமல் லெக் ஸ்லிப் கேட்சுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.

ஜோ ரூட் 6 பந்துகள் டாட் பால்களாக விட்டார், அதனால் ஒரு பந்தை எப்படியாவது மட்டையில் பட்டு விட வேண்டும் என்று போலண்டின் வெளியே சென்ற பந்தை தொட்டார்... கெட்டார், ஸ்மித்திடம் கேட்ச் ஆனது ரூட் டக் அவுட் ஆனார்.

இதில் சுவாரஸியமானது என்னவெனில் ஸ்டோக்ஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்தான், ஒருமுறை கமின்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுக்க கமின்ஸ் வந்த வேகத்துக்கு அதைப் பிடிக்க முடியாமல் தவற விட்டார்.

இன்னொரு முறை ரூட்டுக்கு அதிர்ஷ்டம்னா இதுதான்! கேமரூன் கிரீன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று ஏதோ ஒன்றில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல பெரிய முறையீடு எழுந்தது, பந்து காட் பிஹைண்ட் என்று நடுவர் பால் ரைஃபலும் கையை உயர்த்திவிட்டார், பென் ஸ்டோக்ஸ் ரிவ்யூ செய்ய பந்து மட்டையில் படவில்லை ஸ்டோக்ஸின் ஆஃப் ஸ்டம்பைத்தான் உரசிச் சென்றது என்று தெரியவந்தது, பந்து லெக் ஸ்டம்பை உரசியது, ஆனால் பைல்கள் அசையவில்லை. இது எப்படி ? பைல்கள் அத்தனை ஸ்ட்ராங். ஸ்டம்பும் ஸ்டராங்தான், ஆனால் எப்படியோ பென் ஸ்டோக்ஸ் பவுல்டு ஆகியும் தப்பியது இப்படித்தான்.

top videos

    ஆனால் இங்கிலாந்துக்கு அவசியமான அதிர்ஷ்டம் இல்லையெனில் அந்த அணி இங்கிலாந்தின் லோக்கல் லீக் அணியை விட மோசமாகியிருக்கும். பென் ஸ்டோக்ஸ் அதன் பிறகு ஆக்ரோஷம் காட்டினார், கிரகாம் கிரீனை 2 பவுண்டரிகள் விளாசினார், மிட்செல் ஸ்டார்க்கை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார். இப்போது தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 135/4, பென் ஸ்டோக்ஸ் 52 நாட் அவுட், பேர்ஸ்டோ 45 நாட் அவுட். பாலோ ஆன் தவிர்க்க இன்னும் 84 ரன்கள் தேவை, மொத்தமாக 281 ரன்கள் பின் தங்கியுள்ளது இங்கிலாந்து.

    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Ben stokes