Home /News /sports /

Ashes 2021 3rd test: இங்கிலாந்தை துவைத்துக் காயப்போட்ட அந்த 12 ஓவர்கள்

Ashes 2021 3rd test: இங்கிலாந்தை துவைத்துக் காயப்போட்ட அந்த 12 ஓவர்கள்

இங்கிலாந்தை கசக்கிப் பிழியும் ஆஸ்திரேலியா.

இங்கிலாந்தை கசக்கிப் பிழியும் ஆஸ்திரேலியா.

ஆஷஸ் தொடர் 2021-22-ன் 3வது, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் பிரமாதமாக அமைந்தது அந்த கடைசி 12 ஓவர் ஆட்டம்தான். அதில் இங்கிலாந்தை துவைத்துக் காயப்போட்டது ஆஸ்திரேலிய பவுலிங். குறிப்பாக ஸ்டார்க், போலண்ட் 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க 5,6 விக்கெட்டாக மாற்றி விடுவேன் என்று கேப்டன் பாட் கமின்ஸ் தனது கூர்மையான பந்து வீச்சில் இங்கிலாந்தை அச்சுறுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  ஆஷஸ் தொடர் 2021-22-ன் 3வது, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் பிரமாதமாக அமைந்தது அந்த கடைசி 12 ஓவர் ஆட்டம்தான். அதில் இங்கிலாந்தை துவைத்துக் காயப்போட்டது ஆஸ்திரேலிய பவுலிங். குறிப்பாக ஸ்டார்க், போலண்ட் 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க 5,6 விக்கெட்டாக மாற்றி விடுவேன் என்று கேப்டன் பாட் கமின்ஸ் தனது கூர்மையான பந்து வீச்சில் இங்கிலாந்தை அச்சுறுத்தினார்.

  இங்கிலாந்து பவுலர்களை கடந்த அடிலெய்ட் டெஸ்ட் முடிந்த போது ‘சரியான லெந்த்தில் வீசவில்லை, ஷார்ட் பிட்ச் ஆக வீசினார்கள்’ என்று கேப்டன் ஜோ ரூட் பகிரங்கமாக குற்றம் சாட்ட, அது பெரிய சிக்கலானது, ஏனெனில் ஓய்வறையில் சொல்ல வேண்டியதை பகிரங்கமாக பொதுவெளியில் சொன்னது பிரச்சனையாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிலடியாக பொதுவெளியில் கட்டுரை ஒன்றில் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை, பவுலர்கள் எவ்வளவுதான் சுமையைத் தாங்குவது என்ற ரீதியில் பேச ஒரு பிளவுண்ட மனநிலையில் மெல்போர்ன் டெஸ்ட் தொடங்கியது.

  இதில் முதல் நாளே இங்கிலாந்து, மைக்கேல் வான் சொல்வது போல் ‘கட் அண்ட் பேஸ்ட்’ போல் பிரிஸ்பன், அடிலெய்ட் பேட்டிங்கை கட் அண்ட் பேஸ்ட் செய்தது போல் 185 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு இங்கிலாந்து பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலைமையில் நன்றாக வீசி 110/4 என்று ஆஸ்திரேலியாவை குறுக்கியது, ஸ்டிவ் ஸ்மித், ஹாரிஸ் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா பிறகு 267 ரன்கள் எடுத்து முன்னிலையை 82 ரன்கள் ஆக்கியது. கமின்ஸ், ஸ்டார்க் போன்ற டெய்ல் எண்டர்களையெல்லாம் ஆட விட்டனர். இதனால் 82 ரன்கள் என்பது இங்கிலாந்துக்கு பெரிய லீடாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

  அதன் பிறகு இங்கிலாந்துக்கு இருந்தது 12 ஓவர்கள். இதில் ஒரு 20-25 ரன்கள் நோ-லாஸ் என்று 2ம் நாளை நிம்மதியாக முடிக்கவே இங்கிலாந்து நினைத்திருக்கும், ஆனால் ஜோ ரூட் தூக்கத்தை கெடுத்து விட்டார்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள்.

  கமின்ஸ், ஸ்டார்க் தொடங்கினர், பயங்கரமாக வீசினர், இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீது, ஜாக் கிராலிக்கு கடும் நெருக்கடி, மிகவும் பதற்றத்துடன் ஆடினர். அப்போதுதான் 5வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பேய் மாதிரி வீசினார். லெந்த் பந்து ஒன்று வலது கை பேட்ஸ்மெனுக்கு நெருக்கமாக குறுக்காகச் சென்றது எட்ஜ் எடுத்ததே தெரியவில்லை. அவ்வளவு மெலிதான எட்ஜ் கிரேட் பால், கேரி கேட்ச் பிடிக்க கிராலி வெளியேறினார்.

  இந்தத் தொடரின் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மென் டேவிட் மலான் இறங்கினார். இந்தப் பந்தை வெளியேயிருந்து உள்ளே கொண்டு வந்தார் ஸ்டார்க், கால்காப்பில் வாங்கினார் மலான், நடுவர் கையை உயர்த்தினார், ரிவியூ செய்தார் மலான், பந்தின் ஒரு பகுதி பைலை தட்டும் போல் தெரிய அம்பயர்ஸ் கால், மலான் வெளியேறிய வேண்டிய நிர்பந்தம். ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் ஸ்டார்க். ஹாட்ரிக்கை தடுக்க இறங்கினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அந்தப் பந்து பயங்கரம். ஒரு நூலிழையில் எட்ஜைத்தவறவிட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது, தப்பினார் ரூட்.

  இன்னொரு 5 ஓவர்கள் கடும் நெருக்கடிக்குப் பிறகு போலண்ட் என்ற அந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் வந்தார், அவர் ஹசீப் ஹமீதுக்கு ஷார்ட் ஆஃப் லெந்திலிருந்து கூர்மையான ஒரு சற்றே எழும்பிய பந்தை வீச அதுபாட்டுக்கு எட்ஜ் எடுத்து கேட்ச் ஆனது, ஹமீது அவுட். அதே ஓவரில் ஒரு பந்து சென்று ரவுண்ட் த விக்கெட்டில் போலண்ட் வீசி பந்தை அப்படியே நேரே விட்டார், இரவுக்காவலன் ஜாக் லீச் ஆடாமல் விட ஆப் ஸ்டம்ப் தொந்தரவு ஆனது இங்கிலாந்து 22/4. இன்னும் அரை மணி ஒரு மணி நேரம் ஆட்டம் மீதமிருந்தால் இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியிருக்கும் போல்தான் தெரிகிறது.

  இதையும் படிங்க: அதை பற்றி மட்டும் நான் பேச மாட்டேன், என் சம்பளத்தை புடுங்கிடுவாங்க- மயங்க் அகர்வால்

  இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 51 ரன்கள் தேவை, ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா கைகளுக்கு வந்து விடப்போகிறது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி 60 ஓவர்களே இருக்கும் நிலையில் இங்கிலாந்தை 120 ரன்களுக்குச் சுருட்டி அபார வெற்றி பெற்றது போல், ஆஸ்திரேலியா பவுலிங் இன்று இருந்தது. பாட் கமின்ஸ் அற்புதமான கேப்டன்சியை மேற்கொண்டார். இந்தத் தொடர் முடிவதற்குள் இயன் சாப்பல் கூறுவது போல் பாட் கமின்ஸ் பெரிய கேப்டனாக எழுச்சி பெறுவார், ஜோ ரூட் இங்கிலாந்து கேப்டன்சியை இழந்து விடுவார்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Ashes 2021-22, Australia vs England

  அடுத்த செய்தி