அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் லபுஷேன் அதிர்ஷ்டவசமாக இன்னும் நிற்கிறார். அவர் 2ம் நாள் காலை தன் சதத்தை எடுத்து முடித்தார்.
நேற்று பட்லர் இவருக்கு 2 கேட்ச்களை விட்டார். இன்று சதமெடுத்த பிறகு ஆலி ராபின்சன் பந்தில் எட்ஜ் செய்தார் லபுஷேன், இந்த முறை பட்லர் பிடித்தார், ஆனால் அது நோ-பால் ஆனது. ஆகவே மூன்று முறை வாழ்வு பெற்றார் லபுஷேன்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை தேர்ட்மேன் திசையில் திருப்பி விட்டு 20 டெஸ்ட் போட்டிகளில் தன் 6வது சதத்தை எடுத்தார் லபுஷேன், அவர் 287 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 100 ரன்கள் எடுத்தும் ஸ்மித் 27 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், ஆஸ்திரேலியா 236/2.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர், மார்னஸ் லபுஷேனுகு 2 கேட்ச்களை தவற விட்டார், இரண்டுமே எளிதான கேட்ச்கள்தான், அவ்வளவு பெரிய கிளவ்வை கையில் மாட்டிக்கொண்டு பந்தை நழுவ விடுவதை யாராலும் ஏற்க முடியாது.
மார்கஸ் ஹாரிசுக்கு வலது புறம் டைவ் அடித்து பிரமாதமான கேட்சை எடுத்த பட்லர், அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லபுஷேன் ஆடப்போக பந்து கிளவ்வில் பட்டு லெக் திசையில் எழும்பியது எம்பிய பட்லர் பந்தை நழுவ விட்டார். அந்து நொந்து போனார் ஸ்டோக்ஸ்.
அடுத்த முறை பாவம் மாட்டியது வயதான காலத்தில் அடிலெய்ட் பேட்டிங் பிட்சில் வறுபட்ட உலகின் தலைசிறந்த ஸ்விங் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த முறை உண்மையான எட்ஜ், கைக்கு வருகிறது, கிளவ் இல்லாமலே பிடித்திருக்கலாம் ஆனால் அவ்வளவு பெரிய கிளவ்வை மாட்டிக்கொண்டு தரைதட்டினார் பட்லர்.
இதனால் லபுஷேன் 95 ரன்களில் இருக்கிறார், இன்னும் எத்தனை ரன்கள் அடிப்பார் என்று தெரியவில்லை. அப்படி அவர் இரட்டை சதம் அடித்தால் அதற்குப் பட்லர்தான் காரணம். டேவிட் வார்னர் நேற்று 32 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார், அவரை ஆட விடாமல் வெளியே வீசிக்கொண்டிருந்தனர், அதற்கான பலனை அனுபவித்தனர் இங்கிலாந்து அணியினர். அதே போல் ஒரே ஷார்ட் பிட்ச் பவுலிங்காக வீசித்தள்ளினர். இங்கிலாந்தில் ஸ்விங் ஆகி ஸ்டம்புக்குச் செல்லும் பந்துகள் இங்கு வெளியே சென்றன. இதனால் வார்னர் செட்டில் ஆகி பிரமாதமாக ஆடினார்.
Also Read: கங்குலி, கோலி இருவருக்குமே சொல்கிறேன், இது நல்லதல்ல- கபில் தேவ் அட்வைஸ்
167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட் ஆனார். 89 ஓவர்களில் 221 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.