Home /News /sports /

Ashes 2nd test day2: டான் பிராட்மேன் சாதனை வரிசையில் மார்னஸ் லபுஷேன்

Ashes 2nd test day2: டான் பிராட்மேன் சாதனை வரிசையில் மார்னஸ் லபுஷேன்

மார்னஸ் லபுஷேன் சாதனை

மார்னஸ் லபுஷேன் சாதனை

டான் பிராட்மேன் உள்ளிட்டவர்கள் வரிசையில் அதிவேகமாக 2,000 ரன்களை எடுத்த பேட்டர்கள் வரிசையில் 5வது வீரராக இணைந்து சாதனை புரிந்துள்ளார் மார்னஸ் லபுஷேன்.

ஆஷஸ் தொடர் 2021-22-ன் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது, இதில் 2வது நாளான இன்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் ஏகப்பட்ட வாழ்வுகளுடன் 103 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த இன்னிங்சில் 34 இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்ததன் மூலம் டான் பிராட்மேன், மே.இ.தீவுகள் வீரர் ஜாஜ் ஹெட்லி, இங்கிலாந்தின் ஹெர்ப் சட்கிளிப், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸி, ஆகியோருக்கு அடுத்தபடியாக குறைந்த இன்னிங்சில் 2000 டெஸ்ட் ரன்கள் சாதனைப் பட்டியலில் இணைந்தார் லபுஷேன்.

இதில் டாப் கிளாஸ் டான் பிராட்மேன் தான், இவர் 22 இன்னிங்ஸ்களில் 2000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் ஜார்ஜ் ஹெட்லி 32 இன்னிங்ஸ்களிலும், இங்கிலாந்தின் ஹெர்ப் சட்கிளிப், மற்றும் ஆஸ்திரேலியாவின் மிஸ்டர் கிரிக்கெட் மைக் ஹஸ்ஸி ஆகியோர் 33 இன்னிங்ஸ்களிலும் 2000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லை எட்டினர்.

புதன் கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் மார்னஸ் லபுஷேன் 2ம் இடத்துக்கு முன்னேறினார். பிரிஸ்பனில் 74 ரன்கள் எடுத்ததன் மூலம் 4ம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேறினார்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மார்னஸ் லபுஷேன், வார்னர் இணைந்து 172 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், இன்று சதம் எடுத்தவுடன் லபுஷேன் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 2000 ரன்கள் மொகமட் ரிஸ்வான் உலக சாதனை

அவருக்குப் பிறகு டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ரூட் பந்தை தானே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார். கிரகாம் கிரீன் 2 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் மிக அருமையான பந்தில் பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்டம்பை அவர் கவர் செய்யவில்லை.

இப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்மித் 73 ரன்களில் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறார். அவருடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 24 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்காக இதுவரை 47 ரன்கள் சேர்த்து ஆடிவருகின்றனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Ashes 2021-22, Australia vs England

அடுத்த செய்தி