Home /News /sports /

Ashes 2nd test| பென் ஸ்டோக்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய ஜோ ரூட்- வீடியோ

Ashes 2nd test| பென் ஸ்டோக்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய ஜோ ரூட்- வீடியோ

ஜோ ரூட் ஹெல்மெட்டைப் பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸின் பவுன்சர்

ஜோ ரூட் ஹெல்மெட்டைப் பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸின் பவுன்சர்

நெட்ஸில் கேப்டன் ஜோ ரூட் ஹெல்மெட்டைப் பதம் பார்த்து நான் ஃபிட் தான் என்று கேப்டனுக்கே நிரூபித்தார் பென் ஸ்டோக்ஸ். ஜோ ரூட்டின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸ் பவுன்சர் வீடியோவை இங்கு பார்க்கலாம்.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 2021-22-ன் அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் தேதி தொடங்கும் நிலையில் பிரிஸ்பன் தோல்விக்குப் பதிலடி கொடுக்க இங்கிலாந்து தயாராகி வருகிறது.

    பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை, பவுலிங்கில் ஆங்காங்கே சில பந்துகள் நன்றாக வந்தாலும் ஒட்டுமொத்தமாக அவரும் அடி வாங்கினார் என்றே கூற வேண்டும். நோ-பால்களாக வீசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. முதல் 5 ஓவர்களில் 14 நோ-பால்களை வீசினார் பென் ஸ்டோக்ஸ். இதில் ஒருமுறை வார்னர் பவுல்டு ஆனதும் வீணானது.

    பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் போது பவுண்டரியில் பந்தைத் தடுக்கும் முயற்சியில் லேசாக காயம் ஏற்பட்டது, இதனையடுத்து அவர் அடிலெய்ட் டெஸ்ட்டில் இருக்க மாட்டார் என்றெல்லாம் கருதப்பட்டது.

    ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெட்ஸில் கேப்டன் ஜோ ரூட் ஹெல்மெட்டைப் பதம் பார்த்து நான் ஃபிட் தான் என்று கேப்டனுக்கே நிரூபித்தார் பென் ஸ்டோக்ஸ். ஜோ ரூட்டின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸ் பவுன்சர் வீடியோ இதோ:



    தன் காயம் பற்றி பென் ஸ்டோக்ஸ் ஊடகத்துக்கு தெரிவிக்கும் போது, “களத்தில் இருக்கும் போது என் முழங்கால் முட்டியைத் தேய்த்துக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் முழு ஃபிட். இது பழைய காயம் அவ்வப்போது வந்து போகும் அதை சமாளிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். முதல் டெஸ்ட்டில் ஒரு கேட்சைப் பிடித்தது சில நோ-பால்களை வீசியது தவிர நான் வேறொன்றும் செய்யவிலை.

    இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகுகிறார்?

    இதற்கிடையே அள்ளையில் அடி வாங்கி காயமடைந்த டேவிட் வார்னர் இன்று நெட்டிற்கு வந்து தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோ ரூட்டையே ஹெல்மெட்டில் பதம் பார்க்கிறார் என்றால் அடுத்த டெஸ்ட்டில் ஒரு பொறிபறக்கும் பவுலிங்கை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Ben stokes, Joe Root

    அடுத்த செய்தி