Home /News /sports /

Ashes 2021: நோ-பால் பவுல்டு, கேட்ச் டிராப்: வார்னரின் அதிர்ஷ்டம் - இங்கிலாந்தை வாட்டும் ஆஸ்திரேலியா

Ashes 2021: நோ-பால் பவுல்டு, கேட்ச் டிராப்: வார்னரின் அதிர்ஷ்டம் - இங்கிலாந்தை வாட்டும் ஆஸ்திரேலியா

நோ-பாலில் பவுல்டு ஆன வார்னர்

நோ-பாலில் பவுல்டு ஆன வார்னர்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இங்கிலாந்து 147 ரன்களுக்கு சுருண்டது, 2ம் நாளான இன்று ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 141 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இங்கிலாந்து 147 ரன்களுக்கு சுருண்டது, 2ம் நாளான இன்று ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 141 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது.

    உணவு இடைவேளைக்கு முன்பாக மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் ஆலி ராபின்சன் பந்தை எட்ஜ் செய்து மலானிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறியதோடு சரி. அதன் பிறகு வார்னர் 7 பவுண்டரிகள் 2 சிக்சருடன் ரன்களுடன் 65 ரன்களுடனும் மார்னஸ் லபுஷேன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

    அதிர்ஷ்டம் என்றால் வார்னர்: 3 முறை தப்பினார்:

    வார்னருக்கு இன்று அதிர்ஷ்டம் கடுமையாகக் கைகொடுத்தது, முதலில் 17 ரன்களில் இருந்த போது பென் ஸ்டோக்சின் ஃபுல் டெலிவரியில் பவுல்டு ஆனார். ஆனால் கொண்டாடவில்லை, காரணம் அது ஒரு பெரிய நோ-பால், இந்தப் பந்து மட்டுமல்ல, அதற்கு முன்பாக வீசிய 3 பந்துகளுமே நோ-பால், களநடுவர் கொடுக்கவில்லை இந்தப் பந்தில் விக்கெட் விழுந்ததால் டிவி நடுவர் தலையிட்டு நாட் அவுட் என்றார், தப்பினார் வார்னர்.

    Ashes:வார்னர் பவுல்டு ஆனால் நோ-பால் முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் விமர்சனம்


    இது போதாதென்று வார்னர் அரைசதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஆலி ராபின்சன் பந்து ஒன்று எட்ஜ் எடுக்க கேட்ச் பிடிக்கும் உயரத்தில் வந்தும் டக் அவுட் ஆன ரோரி பர்ன்ஸ் கேட்சையும் விட்டார். வார்னரின் அதிர்ஷ்டம் அதோடு முடிந்ததா? இல்லை.

    கேட்சை விட்ட பர்ன்ஸ்


    ஒருமுறை பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டர் ஹசீப் ஹமீது வார்னர் ஷாட்டைத் தடுக்க வார்னர் கிரீசைத் தாண்டி சென்று திரும்பி வந்த போது கீழே தடுக்கி விழுந்து விட்டார் மட்டையும் கையில் இல்லை, கையால் ரீச் செய்யப்பார்த்தார், ஆனால் ஹசீப் ஹமீது முதலில் பந்தை சரியாக பீல்ட் செய்யாமல் பிறகு பந்தை எடுத்த போதும் நேர அவகாசம் இருந்தது, ஆனால் அவ்வளவு அருகிலிருந்து பந்தை ஸ்டம்பில் அடிக்கத் தவறினார். வார்னர் பிழைத்தார்.

    must read: வெறும் 300 ரன்களை வைத்துக் கொண்டு வங்கதேசத்தை பார்சல் செய்த பாகிஸ்தான்

    ஆனால் அதன் பிறகு ஜாக் லீச்சை கொண்டு வர வார்னர் வெளுத்து வாங்கினார். மார்க் உட் நல்ல வேகம் வீசுகிறாரே தவிர விக்கெட் எடுக்கும் பந்துகள் குறைவு. வார்னர் 2 சிக்சர்களை விளாசினார், லபுஷேன் 1 சிக்சர் அடித்தார், உட்டின் ஆஃப் வாலி பந்துகள் பவுண்டரி அடிக்கப்பட்டன. ஸ்டோக்ஸ், ஆலி ராபின்சன் அருமையாக வீசுகின்றனர், ஆனால் சக்சஸ் கிடைக்கவில்லை. ஜேக் லீச் 4 ஓவர் 33 ரன்கள் கொடுத்து செட்டில் ஆகவிட்டார்.

    Also Read: விராட் கோலி அவராவே போவார்னு 48 மணி நேரம் காத்திருந்த தேர்வுக்குழு- கேப்டன்சி நீக்கப் பின்னணி

    மொத்தத்தில் இப்போது வரைக்கும் இங்கிலாந்தை வாட்டி வதைக்க ஆஸ்திரேலியா தயார் என்பது போல்தான் தெரிகிறது. ஜோ ரூட்டுக்கு பெரிய பிரஷர் உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி