Home /News /sports /

Ashes 3rd test- தோற்ற பிறகு ஜோ ரூட்டை அம்போவென்று தனியாக விட்ட இங்கிலாந்து வீரர்கள்

Ashes 3rd test- தோற்ற பிறகு ஜோ ரூட்டை அம்போவென்று தனியாக விட்ட இங்கிலாந்து வீரர்கள்

ஜோ ரூட்

ஜோ ரூட்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் மெல்போர்னில் இன்று இங்கிலாந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ஜோ ரூட்டை தனியாக விட்டு விட்டு மற்ற வீரர்கள் ஒளிந்து கொண்டது குறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாகச் சாடினார்.

மேலும் படிக்கவும் ...
    ஆஷஸ் டெஸ்ட் தொடர் மெல்போர்னில் இன்று இங்கிலாந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ஜோ ரூட்டை தனியாக விட்டு விட்டு மற்ற வீரர்கள் ஒளிந்து கொண்டது குறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாகச் சாடினார்.

    ஆஸ்திரேலியா 3-0 என்று வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது. ஆஸ்திரேலிய அறிமுக பவுலர் தன் 32வயதில் அறிமுகம் கண்டு 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்து வரலாறு படைத்தார். இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்களில் தோல்வி கண்டது.

    இந்நிலையில் தோல்விக்குப் பிறகு ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் பேசிய மைக்கேல் வான், கேப்டன் ஜோ ரூட்டை தனியாக விட்டு விட்டு அத்தனை இங்கிலாந்து வீரர்களும் பெவிலியனில் முடங்கியது குறித்து கடும் விமர்சனத்தை வேதனையுடன் முன் வைத்தார்.

    “எனக்கு என்ன பிடிக்கவில்லை எனில் தோற்றோம் சரி, ஆனால் ஜோ ரூட்டை தனியாக அம்போவென்று சக வீரர்கள் விட்டுவிட்டு செல்லலாமா? ஜோ ரூட் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார், கூட ஒரு வீரர் கூட இல்லை.

    அவரை தனியாக மைதானத்தில் விடுத்து மற்றவர்கள் பெவிலியனுக்குத் திரும்பியது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரு வீரர் கூடவா ரூட் கூட நிற்கக் கூடாது. சரி தர்மசங்கடம்தான், தோல்வியினால் தர்ம சங்கடம் இருப்பது உண்மைதான், ஆனால் அதற்காக ஓடி ஒளிவதா, முகத்தைக் காட்டுங்கள். முகத்தை மக்களிடம் காட்டுங்கள், கேப்டனுக்கு ஆதரவளியுங்கள்.

    அனைத்துக் கேள்விகளையும் கேப்டனே எதிர்கொள்வது சரியல்ல. அணி கேப்டனுக்குப் பின்னால் நிற்க வேண்டும். கடினமான காலங்களில் கேப்டன் இதைத்தான் எதிர்பார்க்கிறார்” என்று காட்டமாக தெரிவித்தார் மைக்கேல் வான்.

    Also Read: பென் ஸ்டோக்ஸ் ‘மென்’ ஸ்டோக்ஸ் ஆகி விட்டார்- ரிக்கி பாண்டிங் கிண்டல்

    Also Read: Ashes 3rd test| போலண்ட் வரலாறு! 2 நாள் 45 நிமிடத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி- ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
     இந்த ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு டெஸ்ட்டில்தான் தோல்வியை இங்கிலாந்து தவிர்த்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக மழையால் பாதித்த அந்தப் போட்டி டிரா ஆனது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி