Home /News /sports /

Ashes2021 : முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

Ashes2021 : முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய கேப்ட்ன பேட் கம்மின்ஸின் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தனர். வார்னர் (94)மார்னஸ் லாபஸ்சேங் (74), டிராவிஸ் ஹேட் (152) ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து 277 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்னஸ் 13 ரன்னிலும், ஹசீப் அஹமது 27 ரன்னிலும் அவுட்டாகினர். இவர்களுக்கு அடுத்து வந்த டேவிட் மலான் மற்றும் கேப்டன் ஜோ ரூட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்னர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இங்கிலாந்து 220 ரன்கள் எடுத்து இருந்தது.

    இதனால் இங்கிலாந்து பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-ம் நாள் தொடங்கிய உடனே போட்டி ஆஸ்திரேலியா கைக்கு மாறியது. இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து இழந்தது.

    இதனால் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 20 ரன்கள் மட்டுமே நிர்ணயக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ashes 2021-22

    அடுத்த செய்தி