ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஆஸ்திரேலிய இடது கை பேட்டர் உஸ்மான் கவாஜா.
இவரை அணியில் எடுப்பதும் உட்கார வைப்பதுமாக பெரிய அநீதியை அவருக்கு இழைத்தது ஆஸ்திரேலியா அணித்தேர்வுக்குழு அவர்களுக்கு இப்போது பெரிய தலைவலியாக இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை நாயகனாகி தலைவலியைக் கொடுத்துள்ளார், ட்ராவிஸ் ஹெட்டா இவரா என்றுதான் இந்தத் தொடரில் பேசப்பட்டது, அதில் டிராவிஸ் ஹெட் செலக்டர்களின் கடைக்கண் பார்வையைப் பெற்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சிட்னியில் கவாஜா 2 இன்னிங்ஸ்களிலும் சதமெடுத்து ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தியுள்ளார்.
இந்த போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா 131 பந்துகளில் சதமடைத்து சாதனை படைத்துள்ளார். அவர் அடித்த 10-வது சதம் இதுவாகும். முதல் இன்னிங்சிலும் கவாஜா (137 ரன்கள்) சதம் விளாசி இருந்தார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இரண்டு இன்னிங்சிலும் ஒருவர் சதம் அடிப்பது இது 87-வது நிகழ்வாகும்.
இதன் மூலம் உஸ்மான் கவாஜா ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர், சிட்னி மைதானத்தில் இத்தகைய சாதனையை படைத்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 35 வயதான உஸ்மான் கவாஜா சுமார் இரண்டரைஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே சாதித்து இருக்கிறார்.
டிராவிஸ் ஹெட் கொரோனாவால் விலகியதால் அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜா அணியில் இடம் பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கு முன்பு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் டக் வால்டர்ஸ் (1969-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக), ரிக்கி பாண்டிங் (2006-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) ஆகியோர் ஒரு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.