முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய அணிக்குள் ஊடுருவிய கொரோனா- அதிரடி வீரர் விலகல்

ஆஸ்திரேலிய அணிக்குள் ஊடுருவிய கொரோனா- அதிரடி வீரர் விலகல்

ட்ராவிஸ் ஹெட் கொரோனாவால் பாதிப்பு

ட்ராவிஸ் ஹெட் கொரோனாவால் பாதிப்பு

ஆஸ்திரேலியாவின் புதிய அதிரடி மன்னன், இடது கை வீரர் ட்ராவிஸ் ஹெட் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட்டினால் சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.

  • Last Updated :

ஆஸ்திரேலியாவின் புதிய அதிரடி மன்னன், இடது கை வீரர் ட்ராவிஸ் ஹெட் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட்டினால் சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து ட்ராவிஸ் ஹெட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் சிட்னி செல்லும் ஆஸ்திரேலிய அணியுடன் பயணிக்க மாட்டார், மெல்போர்னிலேயே தங்கி விட்டார். இதன் மூலம் ஆஷஸ் அணியில் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி இங்கிலாந்தாக இருந்தாலும் சரி கோவிட் தொற்றிய முதல் வீரர் ஆனார் ட்ராவிஸ் ஹெட்.

ஏற்கெனவே ஆஷஸ் மெட்ச் ரெஃப்ரீ, முன்னாள் தொடக்க வீரர் டேவிட் பூன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரும் சிட்னி டெஸ்ட் போட்டிக்குக் கிடையாது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி 3-0 என்று முன்னிலை வகிக்கிறது, இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸ்திரேலியா, இனி இங்கிலாந்து அடுத்த முறை ஆஸ்திரேலியா இங்கிலாந்து வரும்போதுதான் கோப்பையைத் தட்டிப் பறிக்க முடியும்.

ட்ராவிஸ் ஹெட்டிற்கும் எந்த வித சிம்ப்டமும் இல்லை. இதனால் 5வது டெஸ்ட் போட்டி ஹோபார்ட்டில் நடக்கும் போது டிராவிஸ் ஹெட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக சிட்னி டெஸ்ட்டில் ஏற்கெனவே தயாராக இருக்கும் உஸ்மான் கவாஜா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வீரர்கள் கோவிட்டினால் பாதிக்கப்படலாம் என்ற நிலையில் மிட்செல் மார்ஷ், நிக் மேடின்சன், இங்லிஸ் ஆகிய வீரர்களுக்கும் ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.

புதிய வீரர்கள் தேர்வினால் ஆஸ்திரேலிய அணி மெல்போர்னிலிருந்து சிட்னி செல்வது தாமதமாகியுள்ளது. மேட்ச் ரெஃப்ரீ டேவிட் பூனுக்குப் பதில் ஸ்டீவ் பெர்னார்ட் மேட்ச் ரெஃப்ரீயாகச் செயல்படுவார்.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்க செஞ்சூரியன் கோட்டையை தகர்த்த 3வது அணி இந்தியா

top videos

    நேற்று நடக்க வேண்டிய பிக்பாஷ் டி20 லீக் மேட்சும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட்டினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England