Home /News /sports /

Rory Burns| ரோரி பர்ன்ஸ் பவுல்டு ஆன ஸ்டார்க் பந்து சாதாரண பந்துதான்

Rory Burns| ரோரி பர்ன்ஸ் பவுல்டு ஆன ஸ்டார்க் பந்து சாதாரண பந்துதான்

Ashes 2021- rory burns bowled first ball by Starc

Ashes 2021- rory burns bowled first ball by Starc

ஆஷஸ் தொடர் இன்று காலை பிரிஸ்பனில் ஆர்வமூட்டும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது, எதிர்பார்த்தது போலவே டாஸ் வென்று முதலில் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இது நல்ல முடிவுதான், 4வது இன்னிங்ஸை ஆட முடியாது. இங்கிலாந்து அசாத்தியமான ஆஸ்திரேலிய பந்து வீச்சில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு மழையினால் ஆட்டம் நடைபெறவில்லை.

மேலும் படிக்கவும் ...
ஆஷஸ் தொடர் இன்று காலை பிரிஸ்பனில் ஆர்வமூட்டும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது, எதிர்பார்த்தது போலவே டாஸ் வென்று முதலில் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இது நல்ல முடிவுதான், 4வது இன்னிங்ஸை ஆட முடியாது. இங்கிலாந்து அசாத்தியமான ஆஸ்திரேலிய பந்து வீச்சில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு மழையினால் ஆட்டம் நடைபெறவில்லை.

மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச தயாரானார், இங்கிலாந்து இடது கை தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸும் தயாரானார். ஓவர் த விக்கெட்டில் வீசிய பந்து லெக் ஸ்டம்புக்கு சற்றே வெளியே செல்லும் படியாக ஆஃப் வாலி அல்லது ஓவர் பிட்ச் பந்தாகவே விழுந்தது. அது பவுண்டரி பந்து. ஒரு அருமையான பிளிக் பவுண்டரி தொடக்கமாக அமைய வேண்டியது இந்த நாளின் சீரழிவாக போய் விட்டது. இது யார்க்கர் என்றே கருதப்பட்டது, ஆனால் அது ஆஃப் வாலி பந்து ரோரி பர்ன்ஸ் முன்னால் விழுவது போல் காலைத்தூக்கிப் போட்டு கமிட் ஆனார், லெக் ஸ்டம்பைக் காட்டினார். காலை சட்டென எடுத்து பிளிக் ஆட முடியவில்லை பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல் இருந்தது சற்றே உள்ளே வந்து லெக் ஸ்டம்பின் அடியில தாக்கியது அது யார்க்கர் அல்ல.

ஸ்டார்க் பந்தின் வீடியோ:



எனவே அவர் கமிட் ஆகாமல் இருந்திருந்தால் ஒருவேளை பிளிக் மாட்டியிருக்கும் பவுண்டரி தொடக்கமாக இருக்கும் அது பவுண்டரி பால். வர்ணனையில் இருந்த ஷேன் வார்ன் உள்ளிட்டோரும் ரோரி பர்ன்ஸ் ஆஃப் வாலி பந்தில் ஆட்டமிழந்தார் என்றே கூறினர். கிரிக் இன்போ வர்ணனை கூறியது போல் அது யார்க்கர் அல்ல. லெக் ஸ்டம்ப்பை ரோரி பர்ன்ஸ் கவர் செய்திருந்தால் காலை முன்னால் போடாமல் நின்றிருந்தால் அது பிளிக் பால், பவுண்டரி பால்.

ரோரி பர்ன்ஸின் இந்தத் தவறு அவர் மனதில் வந்து போகவே செய்யும் பல காலங்களுக்கு. இதோடு ஆஷஸ் தொடரில் முதல் பந்திலேயே ஆட்டமிழப்பது ரோரி பர்ன்ஸ் இரண்டாவது முறையாகும் இதோடு இந்த ஆண்டில் 6வது டக் அடித்துள்ளார் பர்ன்ஸ். ஒரு டெஸ்ட் ஓபனருக்கு அதிக டக்குகள் என்கிறது புள்ளி விவரங்கள்.

ஜோ ரூட் பாவம் வந்து நின்றது முதல் அம்புகள் போல் பந்துகள் சர் சர்ரேன கல் போல் அவரைத்தாண்டி சென்றது. ஒரு பந்து உள்ளே கோணத்தில் வந்து நேராகி எட்ஜ் எடுத்து டக் அவுட் ஆனார். ஆண்ட்ரூ பிளிண்ட் ஆஃப், ஆண்ட்ரூ ஸ்ட்ராசுக்கு அடுத்த படியாக ஆஷஸ் முதல் டெஸ்ட் டக்கை கேப்டனாக அடித்தார் ஜோ ரூட்.

அணித்தேர்விலும் தவறிழைத்தார், அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்டுக்காக இந்த டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன், பிராட் இருவரையும் உட்காரவைத்தது மிகப்பெரிய தவறு, ஏனெனில் கண்டிஷன் ஸ்விங்குக்குச் சாதகமாக உள்ளது, கிரீன் டாப் பிட்ச்.

இதையும் படிங்க: Ashes 1st Test: 147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; சாதனை படைத்த ஸ்டார்க்- கேப்டனாக கமின்ஸ் 5 விக்கெட்

பாட் கமின்ஸ் கேப்டனாக 5 விக்கெட்டுகளை முதல் டெஸ்ட்டிலேயே எடுத்தார், 1962-ல் ரிச்சி பெனோ 5 விக்கெட்டுகளை கேப்டனாக எடுத்ததையடுத்து பாட் கமின்ஸ் எடுத்துள்ளார். இங்கிலாந்தின் பாப் வில்லிஸ் 1982-ல் இதே பிரிஸ்பனில் 5 விக்கெட்டுகளை கேப்டனாகக் கைப்பற்றினார். பிரிஸ்பனில் இங்கிலாந்தின் துர்சொப்பன வரலாறு இன்றும் தொடர்ந்தது.
Published by:Muthukumar
First published:

Tags: Ashes 2021-22, Australia vs England

அடுத்த செய்தி