Home /News /sports /

ஆஷஸ் 2021-22 : இங்கிலாந்துக்கு ஒயிட் வாஷ் தோல்விதான் - நேதன் லயன் சீண்டல்

ஆஷஸ் 2021-22 : இங்கிலாந்துக்கு ஒயிட் வாஷ் தோல்விதான் - நேதன் லயன் சீண்டல்

நேதன் லயன்

நேதன் லயன்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அணிக்குள் நிறைய பாசிட்டிவ் எனெர்ஜி உள்ளது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்

    ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு பெரிய ரெக்கார்ட் எல்லாம் இல்லை எனவே இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை 5-0 என்று ஒயிட் வாஷ் செய்யும் என்று கூறியுள்ளார் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன்.

    நேதன் லயன் சொல்வதில் உண்மை உள்ளது, ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து ஆடிய கடைசி  10 டெஸ்ட் போட்டிகளில் 9-ல் இங்கிலாந்து தோல்வி தழுவியுள்ளது. பிரிஸ்பன் மைதானத்தில் இங்கிலாந்து 1986-க்குப் பிறகு வென்றதேயில்லை, இங்குதான் டிசம்பர் 8ம் தேதி நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

    நேதன் லயன் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவார். “இங்கிலாந்துக்கு சிலபல சந்தேகங்கள் உள்ளன, காரணம், இப்போது உள்ள சீனியர் வீரர்கள் பலர் இங்கு முன்பு ஆடியுள்ளனர், ஆனால் ஒரு டெஸ்ட்டிலும் வென்றதேயில்லை. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    மேலும் இவர்களுக்கு இந்த ஆஸ்திரேலிய அணி எப்படி செயல்படும் என்பதில் இங்கிலாந்துக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. அது பயம்தானா என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்களும் தங்கள் அணி மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள்தானே!

    ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை இந்த முறை இங்கிலாந்தை 5-0 என்று ஒயிட்வாஷ் தோல்வியில் முறியடிப்போம் என்றே நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணியில் அனைவரும் போதுமான கிரிக்கெட்டை ஆடிவிட்டுத்தான் இந்த ஆஷஸ் தொடருக்கு வந்திருக்கிறோம். ஏற்கெனவே நாங்கள் ஒரு டைட் அணியாகவே திகழ்கிறோம்.

    Also Read: கடந்த முறை மும்பையில் நியூசிலாந்து டெஸ்ட் ஆடிய போது விராட் கோலியின் வயது 3 வாரம் தான் 

    அதுவும் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அணிக்குள் நிறைய பாசிட்டிவ் எனெர்ஜி உள்ளது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். நான் என் 400வது விக்கெட்டாக ஜோ ரூட்டை திட்டமிட்டுள்ளேன். நாங்கள் இங்கிலாந்தின் பலம் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.வரது வரட்டும் என்று களமிறங்குவோம், பார்க்கலாம்” என்று நேதன் லயன் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes, Australia, England test

    அடுத்த செய்தி