Home /News /sports /

எங்கும் கொரோனா- பிக் பாஷ் மேட்ச் ரத்து, ஆஷஸ் மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூன் கொரோனாவால் பாதிப்பு

எங்கும் கொரோனா- பிக் பாஷ் மேட்ச் ரத்து, ஆஷஸ் மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூன் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா காரணமாக பிபிஎல் மேட்ச் ரத்து.

கொரோனா காரணமாக பிபிஎல் மேட்ச் ரத்து.

இன்று நடைபெற இருந்த பிக்பாஷ் டி20 லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன ஆனால் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற இருந்த பிக்பாஷ் டி20 லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன ஆனால் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீகில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்த தொடரில் இன்று நடைபெற இருந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தொற்று உறுதிசெய்யப்பட்ட அதிகாரியுடன் தொடர்பில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை பரிசிசோதனை முடிவுகள் வரவில்லை என்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இது ஒருபுறம் என்றால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஆட்ட நடுவர் அதாவது மேட்ச் ரெஃப்ரீயும் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரருமான டேவிட் பூன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ஆஷஸ் தொடர் சிட்னி டெஸ்ட் போட்டி நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. இங்கிலாந்து அணியுடன் வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர் சிட்னிக்கு வரமாட்டார்.

    டேவிட் பூன் 2 டோஸ் வாக்சின் போட்டுக் கொண்டு பூஸ்டர் டோஸும் போட்டுக் கொண்டவர். இவருக்கும் கொரோனா பீடித்தது. இவர் சிட்னியில் வரமாட்டார், ஹோபார்ட்டில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியன்று ஜனவரி 14ம் தேதி திரும்புவார்.

    Also Read: முதல் டெஸ்ட் 5ம் நாள்: எல்கருக்கு ஈசி கேட்சை விட்ட ஷமி, வெற்றிக் கதவுகளை திறந்த பும்ரா
     நியூசவுத்வேல்சில் 11,000த்திற்கும் அதிகமாக கோவிட் கேஸ்கள் பதிவாகியுள்ளன. வரும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Corona

    அடுத்த செய்தி