Home /News /sports /

பென் ஸ்டோக்ஸ் ‘மென்’ ஸ்டோக்ஸ் ஆகி விட்டார்- ரிக்கி பாண்டிங் கிண்டல்

பென் ஸ்டோக்ஸ் ‘மென்’ ஸ்டோக்ஸ் ஆகி விட்டார்- ரிக்கி பாண்டிங் கிண்டல்

பென் ஸ்டோக்ஸ்- ரிக்கி பாண்டிங்

பென் ஸ்டோக்ஸ்- ரிக்கி பாண்டிங்

எதிரணியினர் இவரைப் பார்த்தாலே பயப்படுவார்கள் என்ற ஒரு தன்மையை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    எதிரணியினர் இவரைப் பார்த்தாலே பயப்படுவார்கள் என்ற ஒரு தன்மையை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.  அதாவது பென் ஸ்டோக்ஸ் இப்போதெல்லாம் ‘மென்’ ஸ்டோக்ஸ் என்று கூறும் அளவுக்கு மென்மையாகி விட்டார் என்கிறார் பாண்டிங்.

    ஆஷஸ் தொடர் 2021-22 மெல்போர்ன் டெஸ்ட், 3வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது இதில் இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்து திண்டாடி வருகிறது. 

    இந்நிலையில் கிரீசில் இருக்கும் ஸ்டோக்ஸ் என்னவோ ஒரு டீன் எல்கர் போலவும், வெஸ்ட் இண்டீஸின் சுவர் சந்தர்பால் போலவும் ஆட முயற்சிக்கிறார். அது இவருக்கு வராது என்பதுதான் கசப்பான உண்மை, அதனால் அவர் தனக்கு வருவதை ஆடி தடுமாறும் இங்கிலாந்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே நம் விருப்பமும் ரிக்கி பாண்டிங்கின் விருப்பமும் கூட.

    பென் ஸ்டோக்ஸ்


    இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்துக்கு பேட்டியளித்த ரிக்கி பாண்டிங், “என்னமோ தீவிர தடுப்பாட்டக் காரர் போல் ஆடுகிறார் பென் ஸ்டோக்ஸ், கிரீசில் இவர் இருந்தாலே பயமுறுத்துவார் என்ற ஒரு பெரிய உருவம்என்ற தன்மை அவரிடம் இப்போது மறைந்து விட்டது, மென் ஸ்டோக்ஸ் ஆகிவிட்டார்.

    பென் ஸ்டோக்சை புரிந்து கொள்ள முடிகிறது, பேட்டிங்குக்குச் சாதகமான ஆட்டக்களங்கள் இல்லை இதைவிட எதிரணியினரின் பந்து வீச்சு தரமும் அவரது தீவிர ஸ்ட்ரோக் பிளேயை அனுமதிக்கவில்லை.

    ஆனால் எப்போதும் கிரேட் பவுலர்களை அடித்து ஆடி அவர்களின் லைன் மற்றும் லெந்த்தை காலி செய்யவில்லை எனில் அவர்கள் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடுவார்கள் என்பதையும் பென் ஸ்டோக்ஸ் உணர வேண்டும்.

    எப்போதும் நான் கூறுவதென்னவெனில் எதிரணி பவுலிங் பிரமாதமாக இருக்கிறதா? நாம் அந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுத்து ஆட முயற்சி செய்ய வெண்டும் என்பதே. ஏனெனில் எந்த பவுலரும் பவுண்டரி பந்துகளை போட்டுத்தர மாட்டார்கள். கொஞ்சம் தவறாக வீசினாலும் நாம் பாய்ந்து அடித்து விட வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், நிறைய சிங்கிள்கள் எடுக்க வேண்டும்.
    உத்தி ரீதியாக மற்ற இங்கிலாந்து வீரர்களை ஒப்பிடும் போது ஸ்டோக்ஸ் பிரமாதனமாவர்தான், அவரை பின்னால் இறக்கி விட்டு உத்தியே இல்லாதவர்களை டாப் ஆர்டரில் இங்கிலாந்து இறக்கி வருகிறது. ஜோ ரூட்டுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ்தான் டெக்னிக் விஷயத்தில் சிறந்த வீரர்.

    அணியின் மூத்த வீரர்களான ஸ்டோக்ஸ், ரூட், பட்லர், பேர்ஸ்டோ போன்ற சீனியர் வீரர்கள் சமயத்துக்கு ஆடவில்லை எனில் இளம் வீரர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? சீனியர்கள் இப்படி உதாரணமாக இருந்தால் இளம் வீரர்களும் தவறுகள் செய்வார்கள்” இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

    இந்தத் தொடரில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 34 ரன்களையே எடுத்துள்ளார். நாளை மெல்போர்ன் டெஸ்ட்டில் இன்னிங்ஸை தொடரும் பென் ஸ்டோக்ஸ், ரிக்கி பாண்டிங்கின் இந்த கூற்றை முறியடிப்பாரா?
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Ben stokes

    அடுத்த செய்தி