• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆஷஸ் தொடர்: ஒதுக்கப்பட்ட வீரர் மீண்டும் அழைப்பு- கேப்டன் யார்? அட்டவணை, முழு விவரம்

ஆஷஸ் தொடர்: ஒதுக்கப்பட்ட வீரர் மீண்டும் அழைப்பு- கேப்டன் யார்? அட்டவணை, முழு விவரம்

  • Share this:
    கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான விருந்தான ஆஷஸ் தொடர் டிசம்பர் மாதம் முதல் டெஸ்ட்டுடன் தொடங்குகிறது, இதற்காக டிம் பெய்ன் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த உஸ்மான் கவாஜாவுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பந்து வீச்சில் அதே உலகத்தரம் வாய்ந்த பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன் இருக்கின்றனர். மைக்கேல் நீசர், ஜை ரிச்சர்ட்சன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜேம்ஸ் பேட்டின்சன் கடந்த மாதம் அதிர்ச்சிகரமாக ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

    மூளை அதிர்ச்சி எனும் கன்கஷன் சிகிச்சையில் உள்ள, இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான வில் பூகோவ்ஸ்கிக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸே டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை.

    2019க்குப் பிறகு கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஆனால் உள்நாட்டு ஷெஃபீல்ட் ஷீல்டில் பிரமாதமாக ஆடி வருவதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் 67.33 என்ற சராசரியில் 404 ரன்களை 2 சதங்களுடன் எடுத்துள்ளார் கவாஜா. ட்ராவிஸ் ஹெட்டும் மிடில் ஆர்டர் நிலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், எனவே லெவனில் யார் ஆடுவது என்பதில் கவாஜாவுக்கும் ட்ராவிஸ் ஹெட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

    ஆல்ரவுண்டராக கிரகாம் கிரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேதன் லயனுக்கு பேக்-அப் வீரராக மிட்செல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி: டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ட்ராவிஸ் ஹெட், பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மைக்கேல் நீசர், ஜை ரிச்சர்ட்சன்,

    ஆஷஸ் தொடர் முழு அட்டவணை:

    நவம்பர் 23-25, இங்கிலாந்து - இங்கிலாந்து லயன்ஸ், பிரிஸ்பன்

    நவ.30-டிசம்பர்3, இங்கிலாந்து- இங்கிலாந்து லயன்ஸ், பிரிஸ்பன்

    டிசம்பர் 1-3- ஆஸ்திரேலிய அணிக்குள்ளேயே போட்டி, பிரிஸ்பன்

    டிசம்பர் 9-12- ஆஸ்திரேலியா-இங்கிலாந்து லயன்ஸ், பிரிஸ்பன்.

    டெஸ்ட் போட்டிகள்:

    டிச.8-12 பிரிஸ்பன் முதல் டெஸ்ட்

    டிசம்பர் 16-20 அடிலெய்ட் ஓவல், 2வது டெஸ்ட்.

    டிசம்பர் 26-30 மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்-3வது டெஸ்ட்

    ஜனவரி 5-9, சிட்னில் 5வது டெஸ்ட்.

    ஜனவரி 14-18, பெர்த், 5வது டெஸ்ட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: