முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes 3rd test: 2021-ம் ஆண்டில் 54 டக்குகள்- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘சாகசம்’!

Ashes 3rd test: 2021-ம் ஆண்டில் 54 டக்குகள்- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘சாகசம்’!

England Team

England Team

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மெல்போர்ன் இன்னிங்ஸ் தோல்விக்குப் பிறகு தெரிவித்துள்ளார், ஆனால் உண்மையில் 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு படுமோசமாக இருந்தது, அந்த அணியில் 2021-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 54 டக்குகள் அதாவது பூஜ்ஜியங்கள் பதிவாகியுள்ளது.

மேலும் மெல்போர்ன் தோல்வியுடன் இந்த ஆண்டில் 9 டெஸ்ட்களை தோற்றும் சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜுஜுபி லீடான 82 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 32 வயது மெல்போர்ன் ஸ்பெஷலிஸ்ட் போலண்ட்டிடம் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கொடுத்து 68 ரன்களுக்கு இங்கிலாந்து மடிந்து இன்னிங்ஸ் தோல்வி கண்டது. ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை 3-0 என்று வென்றது.

மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்வியடையும், ஒயிட்வாஷ்தான் என்று ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக இங்கிலாந்திற்கு ஆணியடித்து வருகின்றன. ஜோ ரூட் மட்டும்தான் அதிகபட்ச ஸ்கோராக 28 ரன்களை எடுத்தார். இந்த 2021-ம் ஆண்டில் ஜோ ரூட் 1708 ரன்களை எடுத்து சிறந்த பேட்டராக திகழ்கிறார்.

மெல்போர்ன் தோல்வி இந்த ஆண்டில் இங்கிலாந்தின் 9-வது தோல்வி இதுவும் ஒரு சாதனையாக பேசப்படுகிறது. இதற்கிடையே மெல்போர்ன் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டர்கள் 4 பேர் டக் அவுட் ஆக இந்த ஆண்டில் இங்கிலாந்து வீரர்களின் டக் அவுட் எண்ணிக்கை சாதனையான 54 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இதற்கு முன்னால் 1998-ம் ஆண்டில்தான் இங்கிலாந்து வீரர்கள் ஆண்டில் 54 டக்குகளை அடித்துள்ளனர். இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக அணியை சாடி வருகின்றன. “இது ஆஷஸ் தோல்வி அல்ல, இது ஆஷஸ் சரண். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக மாற்றம் கோரும் தோல்வி” என்று சாடி வருகின்றன.

Also Read: ஐபிஎல் 2021- டாடீஸ் ஆர்மி சிஎஸ்கே அணிக்கு வலைவீசும் கைவிடப்பட்ட சீனியர் வீரர்

1904க்குப் பிறகு 68 ஆல் அவுட் இப்போது 2021-ல் இங்கிலாந்தின் மோசமான அணி இதுதானோ என்று பத்திரிகைகள் கடுமையாக சாடி வருகின்றன.

First published:

Tags: Ashes 2021-22, Australia vs England, Joe Root